கடந்த மாதம் (28) ஆம் திகதி உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கமா நகர் சென்ற மாகாண சபை உறுப்பினர்கள் இன்று (02) திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நாடு திரும்பினர்.
சவூதி அரேபியாவில் அமையப்பெற்ற புனித மக்கமா நகருக்கு உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் உம்றா கடமைகளை நிறைவேற்றுவதற்காக கடந்த மாதம் (28) ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு பயணத்தை மேற்கொண்ட மாகாண சபை உறுப்பினர்கள் தங்களின் உம்றா கடமைகளை நிறைவு செய்துவிட்டு இன்று (02) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
.jpg)