ஹாசிப் யாஸீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிக்கு எதிராக சாய்ந்தமருதில் இன்று ஜூம்ஆ தொழுகையை தொடந்து ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலிலுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்கப்படாதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவிக்கு செருப்பினால் மாலை அணிவித்து தலைவர் ஒளிக என்ற கோஷத்துடன் செருப்பால் அடித்தனர்.
இதன்போது ஹக்கீமின் உருவ பொம்மையினை தீவைக்க முயன்றபோது கல்முனை பொலிஸார் தடுத்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கலவரம் ஏற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்.
மு.கா தலைவரின் கொடும்பாவியினை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்க முட்பட்டபோது கல்முனை பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியதுடன் அதனை கொண்டு சென்றுள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)