புதிய அரசின் நடவடிக்கை அதிருப்தியில் ஜே.வி.பி !

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தாமதமாகியுள்ளதாகவும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களில் முறைப்பாடுகள் சம்பந்தமாக நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாது எனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஊழல், மோசடிகள் குறித்து விசாரிப்பதை அரசாங்கம் தாமதித்து வருகிறது. ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தது.

முன்னைய ஆட்சியின் கீழ் ராஜபக்ச குடும்பம் அவர்களை சுற்றியிருந்த நபர்கள் குழு அரச வளங்களையும் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஜே.வி.பி அந்த ஊழல் மோசடிகளை விமர்சித்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தும் ஜனவரி 13 ஆம் திகதி ராஜபக்ச ஆட்சியின் ஊழல், மோசடிகள் தொடர்பாக நாங்கள் ஆவணங்களுடன் சாட்சியங்களை முறைப்பாடுகளை முன்வைத்தோம்.

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சஜின்வாஸ் குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக நாங்கள் முறைப்பாடுகளை செய்தோம்.

விசாரணை நடத்துவோர் எம்மிடம் கருத்துக்களை கேட்ட போதும் மறுத்தரப்பினரிடம் எந்த விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை. சிலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகளை செய்தனர்.

100 நாட்களில் தற்போது 50 நாட்கள் நெருங்க போகிறது. எனினும் சம்பந்தப்பட்ட விசாரணைகள் இன்னும் நடத்தப்படவில்லை. யோஷித்த ராஜபக்ச, கடற்படையில் ஏனைய அதிகாரிகளுக்கு கிடைக்காத சிறப்புரிமைகளை அனுபவித்தார்.

தேர்தல் முடிவடைந்ததும் ஜனவரி 9 ஆம் திகதி காலையில் யோஷித்தவை கடற்படையில் இருந்து விலக்கிக்கொள்ளும் கடிதம் கையளிக்கப்பட்டது. கடற்படை யோஷித்தவுக்கு மூன்று மாத கால விடுமுறைக்கு அனுமதி வழங்குகிறது.

ஏனைய கடற்படையினருக்கு கிடைக்காத சிறப்புரிமைகள் அவருக்கு எப்படி கிடைக்கின்றது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி ஜே.வி.பி. பாதுகாப்புச் செயலாளரிடம் முறைப்பாடு செய்தது.

குழுக்களை நியமித்து விசாரணை நடத்துவதாக கூறினார்கள். அது குறித்து விசாரணை நடத்த குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யோஷித்த பேபி வெளிநாடு செல்கிறார்.

அவர் நாட்டில் இருந்து செல்ல யார் இடமளித்தது. ஒரு நாள் கூட அந்த விசாரணைக்குழு யோஷித்தவை விசாரணைக்கு அழைக்கவில்லை எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -