செயலாளர் மீது சேறு பூசவேண்டாம்

 மீரா.அலி ரஜாய்-

கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி தொடர்பான விடயங்களும் இடம் பெற்றிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப்போடு கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு இன்றுவரை தற்போதைய தலைமைத்துவத்துக்கும் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், போராளிகள் எனப் பல தரப்பினருடனும் உறவைப் பேணிவரும் ஹஸனலி மீது சேற்றை வாரி இறைக்க முற்படுவது பெரும் அபாண்டமாகும்.

சமூக மட்டத்தில் கட்சி பாதிக்கப்படும் போது அதற்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசியல் ரீதியிலும் பல இடைசூ;சல்களைக் கண்டவர்.

அவருடைய இத்தனை வருட அனுபவ கால்த்தில் தற்போது அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட்டமை இதற்கான காழ்ப்புணர்ச்சிக்குக் காரணமாகும் மட்டக்களப்புக்கு முதலமைச்சர் பதவி போனால் தனக்கு வாசி என்பது போல் பேசியுள்ளதாக சில இணையத் தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த பல வருடங்களாக எந்தவொரு பதவியையும் விரும்பாமல் தனித்துவமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் செல்ல வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். அவருக்கு பதவிகள் தேவைப்பட்டிருந்தால் அல்லது சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டுமென்றிருந்தால் கடந்த அரசாங்க காலத்தில் பல சுகபோகங்களை கூட அனுபவித்திருப்பார்.

கட்சியையும் போராளிகளையும் கட்டுக் கோப்புடன் வழி நடாத்தும் செயலாளர் நாயகத்தை தலைமைத்துவம் உட்பட அனைத்து தரப்பினரும் நன்கறிவர்.

ஆகவே அம்பாரை மாவட்டத்தை சேர்நதவர்கள் எவர் மீதம் ஹஸனலி அவர்கள் பொறாமைப்படாத ஓருவர் என்பதற்கு போராளிகளே சாட்சிகளாவர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -