மாணவர்கள் கேலி செய்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: கடிதம் சிக்கியது

செங்கம் அருகே கீழ் கொல்லை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களான தாமோதரன் - ராணி தம்பதியின் மகள் லாவண்யா. லாவண்யா ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு பயின்றார். இந்நிலையில் நேற்று விடுதியில் தங்கியிருந்த மற்ற மாணவிகள் குளிக்க சென்றனர். அப்போது லாவண்யா மட்டும் அறையில் இருந்தார். மற்ற மாணவிகள் அறைக்கு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

தட்டி பார்த்தும் லாவண்யா கதவை திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாவண்யா தங்கியிருந்த அறையில் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை, அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.

பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேர்க்க வேண்டும். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை (கலாய்க்கிற) கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக்கூடாது. அவர்களை நான் சும்மா விட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக்கொண்டேன். எனக்கு உதவி செய்த தோழிகளுக்கு நன்றி என் சாவுக்கு இந்த பள்ளிக்கும் விடுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடிதத்தின் அடிப்படையில் மாணவியை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -