காலித் அப்துல் ஹமீட்-
இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தினாலும், ஏழைகளினதும் விவசாயிகளினதும் உழைப்புக்கள் மறைமுகமாக சூரையாடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டு டாம்பீகமானதொரு வாழ்க்கையை வாழந்துகொண்டிருந்த கொடுங்கோண்மையை விரட்டியடிப்தற்காக தனது காலத்தையும் நேரத்தையும் தன்னாலான முழுப் பலத்தையும் செலவுசெய்து நாட்டுமக்கள்மீதும் ஏழைகள்மீதும் கருனைகாட்டி
ஏழைகளின் தோழனான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆட்சிபீடமேற்றுவதற்கு முக்கிய பங்களிப்புச்செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்க குமாரதுங்க அவர்கள் சார்பாக சம்மாந்துறை மக்களுக்கு நன்றி செலுத்தவும் மக்களோடு சிறிதுநேரம் கலந்துரையாடவும் மற்றும் றமீஸ் பௌன்டேசன் நிகழ்வினை அங்குரார்பணம் செய்துவைப்பதற்காகவும்
பிரதம அதிதியாக மேல்மாகாணசபை, கொலன்னாவ தேர்தல் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவரும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயம் அறியா இளம் கன்றுபோல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டவருமான ஹிருணிக்கா பிரேமச்சந்திர அவர்களும் மற்றும்
இன்னும் பல விசேடஅதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழா 2015.02.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சகோதரர் ஏ.எச்.றமீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
(பெண்களுக்காக பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது)
இவ்வண்ணம்
விழா ஏற்பாட்டுக்குளு
றமீஸ் பௌன்டேசன்
சம்மாந்துறை
%2Bcopy.jpg)