ஹாசிப் யாஸீன்-
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச மத்ரஸாக்களுக்கிடையிலான மீலாதுன் நபி தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் விசேட மார்க்க சொற்பொழிவும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று (07) சனிக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையளர் சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள், உலமாக்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மீலாதுன் நபி தினத்தின் மகிமைகள் பற்றி விசேட மார்க்க சொற்பொழிவினை மௌலவி யூ.ல்.எம்.தௌபீக் நிகழ்த்தினார்.
.jpg)
.jpg)
.jpg)