தான் ஒரு அமைச்சரான போதிலும், அதனை தன்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரத்தை மறக்கும் காலம் அளவு எதிர்க்கட்சியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இன்று நான் அமைச்சராக இருந்த போதும் என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. காலையில் எழுந்துவுடன் எனது வீட்டின் அருகில் 50, 60 கடிதங்களை பார்த்தவுடனே எனக்கு ஞாபகம் வருகின்றது நான் ஒரு அமைச்சர் என்று.
அவ்வாறான ஒருகாலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தோம். எங்கள் மக்களும் அதே போன்ற ஒரு மன நிலையிலே உள்ளார்கள்.
நாங்கள் தற்பொழுது இருப்பது அரசாங்க கட்சியில். யாருக்கும் இவ்வளவு காலம் இருந்த அரச அதிகாரத்தினால் செய்துகொள்ள முடியாமல் இருந்த காரியங்களை இப்பொழுது செய்துகொள்ள முடியும்.
எப்படியிருப்பினும் கிடைக்கும் பதவி பட்டங்கள் எல்லாம் தற்காலிகமானவை என மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த உதாரணம் ராஜபக்ச என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
