ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவினால் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின்போது வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மீது கடந்த இரண்டு நாட்களாக விவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
