ஏ.எம் அஸ்மி-
கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசினாலும் - அரசு சார்பற்ற நிருவனம்களினாலும் பகிரப்பட்ட வெள்ள நிவாரணத்தில் ஏறாவூர் பற்றில் உள்ள சில கிராமங்கள் புறக்கணிக்கப் பட்டதாக தெரிவித்து நாளை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை ஏறாவூர் மீராகேணி ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் முன்னெடுக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏறாவூர் இல் உள்ள பெரும்பாலான கிராம சேவகர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக உலர் உணவுப் பொருட்கள் அரச அதிகாரிகளால் பகிர்ந்தளிக்கப்பட்ட போதும் ஏறாவூர் பிரதேச செயலக எல்லைக்குள் உள்ள மிச்நகர் - மீராகேணி -சதாம் ஹுசைன் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் அத்துடன் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட தமது பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாளை ஜும் ஆ தொழுகையை தொடர்ந்து ஏறாவூர் மீராகேணி பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்து ஒரு கவனஈர்ப்பு போராட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக குறித்த கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர் -
இதே வேளை குறித்த விடயம் தொடர்பில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் S.L .M . ஹனீபா அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது- இது முழுக்க முழுக்க மக்களின் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்டுள்ள ஒரு விடயம் அவர்கள் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இருந்தால் அதற்கான காரணம் விளக்கப்பட்டிருக்கும் - உண்மையில் ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் எந்த ஒரு கிராமமும் புறக்கணிக்கப் படாமலே குறித்த நிவாரணப் பனி முன்னெடுக்கப் பட்டது ஆனாலும் குறித்த காலப்பகுதி வருட இறுதி மற்றும் தேர்தல் காலமாக இருந்ததாலும், குறித்த பகுதி மக்கள் இடம் பெயர்ந்து இருந்ததாலும் உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்க முடியவில்லை -
இந்த நிலையில் நாளை மீண்டும் விநியோகப் பணியை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்ததுடன் மக்கள் இவ்வாறான விடயங்களில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
