போலிஸ் மற்றும் படையினர் வசமுள்ள கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படும் - மனோ கணேசன்

யங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு,புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் சந்தேகத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் பெயர் விபரங்களை தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று தேசிய நிறைவேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.

இன்று காலை நிறைவேற்று சபை கூடியபோது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இலங்கை முழுக்க சிறைசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்கள் சபையில் சமர்பிக்கப்பட்டது. 

இதையடுத்து பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்களையும் தரும்படி மனோ கணேசன் கோரினார். 

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த தகவல்களையும் போலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளிடமிருந்து பெற்று சபைக்கு சமர்பிக்கும்படி, தேசிய நிறைவேற்று சபையின் செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -