கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்வந்துள்ள நிலையில் அதனை அக்கட்சிக்குள் யாருக்கு வழங்குவது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் யாரு என்பதை இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் நான் அறிவிப்பேன் என்று சற்று முன் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மருதமுனையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மேற்கண்டவாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
