ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதம மந்திரியாக பதவி வகித்த காலத்தில் கொலை செய்யப்பட்ட நமது முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் குடும்பத்தினர் முன்னிலையிலே தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூர சம்பவங்கள் நடந்தன.
கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை:
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் தான் நமது முஸ்லிம் சமூகத்திற்கு கொடூரமான நிகழ்வுகள் இடம்பெற்றன. பொது வேட்பாளராக போட்டியிடும் திரு .மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாட்களுக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவை அதிகாரமுள்ள பிரதம மந்திரியாக நியமிப்பதாக பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். அதிகாரமுள்ள பிரதம மந்திரியாக ரணில் விக்ரமசிங்க வருவதற்கு இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஐக்கிய தேசிய கட்சி பாவித்துள்ளது.
எனவே ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் நன்கு சிந்தித்து சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என ஏறாவூர் நல்லிணக்க மற்றும் வலுவூட்டல்களுக்கான நிலையத்தின் தலைவர் எம்.எஸ். நஸிர் தலைமையில் ஏறாவூர் பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஏறாவூர் அல்-அஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறுகையில், கடந்த 30 வருட காலமாக நிகழ்ந்த யுத்த சூழ்நிலையில் நேரடியாக எமது முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்;ட நமது உலமாக்கள், தாய்மார்கள், மக்கள் எல்லோரும் இந்த நாட்டில் சமாதானம் உருவாக வேண்டுமென இறைவனை பிரார்த்தனை செய்தனர். புனித மக்காவுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற ஆயிரக்கணக்கான ஹஜ்ஜாஜிகள் நமது நாட்டில் நிரந்தர சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
நமது நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பல பேர் யுத்த நிறுத்தம் செய்து சமாதான உடன்படிக்கைகளை காலத்திற்கு காலம் மேற்கொண்டு வந்தனர். அவைகள் வெற்றியளிக்கவில்லை முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸா, சந்திரிக்கா பண்டாரநாயக்க போன்றோர்களும் ஏமாற்றப்பட்டு யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்துவதற்கு தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் இருந்தனர்.
சென்ற 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்ட போது நாங்கள் நமது நாட்டில் யுத்தத்தை இல்லாமல் செய்து நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை சில கட்சிகள் பெற்றுக்கொடுத்தன. 2005ல் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதால் 30 வருட கால யுத்தத்தை இல்லாமல் செய்தார்.
சமாதானத்தை உருவாக்கினார். கிழக்கு மாகாணம் தனியாக பிரிந்ததனால் நமது மாகாணத்திற்கான நிதிகள் அதிகளவு வழங்கப்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன.
இணைக்கப்பட்ட வட–கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தில் நமது முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடாத்தப்பட்டது என்பதனை நாம் அறிவோம். கிழக்கு மாகாண சபையூடாக பல வரலாற்று அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டதுடன் மூன்று இனங்கள் மத்தியில் அறுந்து போயிருந்த இன உறவுகளை வளர்த்துள்ளோம்.
நமது நாட்டில் வரலாற்றை பின் நோக்கிப் பார்த்தால் காலத்திற்கு காலம் இனவாதிகளின் செயல்பாடுகள் இடம்பெற்றே வந்துள்ளன. சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நமது பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் எமது மக்களுக்கு அபிவிருத்திப் பணிகள் செய்த போது விமர்சனங்கள் செய்தனர். புத்தம் சரணம் கச்சாமி....... ஒலுவில் சரணம் கச்சாமி என்று கூட பாராளுமன்றத்தில் தூசித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அஷ்ரபும் முஸ்லிம்களும் எனது அரசோடு இருக்கின்றனர் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவேன் எனக் கூறினார்.
இன்று நமது நாட்டில் யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டு வரலாற்று அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதிகளின் நடவடிக்கைகளால் எங்களது உள்ளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நமது கலாசார விடயங்களில் கூட எமது உள்ளங்களை வேதனப்படுத்தக் கூடிய மிகவும் மோசமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களை நாம் தொடர்ச்சியாக கண்டித்துள்ளோம்.
யுத்த காலத்தில் நமது நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் நமது மார்க்க கடமைகளை மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டதுடன் பல பள்ளிவாசல்கள் குண்டுத்தாக்குதல்களால் சேதமாக்கப்பட்டன. இவ்வாறு காலத்திற்கு காலம் நமது சமூகத்திற்கு எதிரான இனவாத சக்திகள் செயல்பட்டு வந்துள்ளன. இக் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு இறை தண்டனை கிடைக்கும்.
கடந்த காலங்களில் நாம் பிறந்த மண்ணிலேயே சுதந்திரமாக பேசுவதற்கும், நடமாடுவதற்கும் உரிமையற்றவர்களாகவும், நிம்மதியற்றவர்களாகவும் நாம் வாழ்ந்து வந்தோம்.
யுத்தத்தை இல்லாமல் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடந்த 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி ஆளும் கட்சிக்குள் பிரச்சினைகளை உருவாக்கினார்கள். இருந்த போதிலும் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றார்.
2015 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை பிரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக நியமித்துள்ளது. எனவே யுத்தத்தை இல்லாமல் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக ஏறாவூர் பிரதேச கல்வி, கலாசார, சமூகப்பணிகளில் தியாகத்துடன் செயல்பட்டுவரும் நல்லிணக்க மற்றும் வலுவூட்டல்களுக்கான நிலையத்தின் பணிப்பாளர் சபையினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த நிலையத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை வழங்குவேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி உட்பட முக்கியஸ்தர்களும் கல்வி அதிகாரிகளும் உரையாற்றினார்கள்.

.jpg)
0 comments :
Post a Comment