தேசிய ஐக்கிய முன்னணி பொது எதிரணியில் (மைத்திரியுடன்) இணைந்தது

அஷ்ரப் ஏ சமத்-

ட்சியாளர்களின் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள நாடு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் வகையில்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய ஐக்கியமுன்னணி தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் நீதி, ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு சிநேகமான ஆட்சிஎன்பனவற்றுக்கான பொது வேலைத்திட்டத்தை உள்ளடக்கிய'பொதுமக்கள் நிகழ்ச்சிநிரல்'புரிந்துணர்வு ஆவணத்தில்நேற்று ஒப்பமிட்டார். 

எதிர்க்கட்சிகளின் முக்கியதலைவர்கள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்வு நேற்றுகொழும்பு விகாரமாதேவி பூங்கா திறந்த வெளிஅரங்கில் இடம்பெற்றது.

இந்த 'பொது மக்கள் நிகழ்ச்சிநிரலில்'குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களில் தேசியஐக்கிய முன்னணியை கையொப்பமிடச் செய்யும் அளவுக்குதூண்டிய முக்கிய விடயங்களாக பின்வருவனவற்றை எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய ஆட்சியில் ஏற்பட்டுள்ளபாரதூரமான இந்த நிலைமைகளில் துரித கவனம் செலுத்திமாற்றத்தை ஏற்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

1. சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் குலைந்துள்ளமை.
2. நல்லாட்சிக்கு தேவையான ஜனநாயக அமைப்புக்கள்உருக்குலைந்து போய் உள்ளன.

3. சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் சமூக நீதி என்பனமுன்னொரு போதும் இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ளன.
4. பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் சமயக் குழுக்கள்மத்தியில் சகவாழ்வு மிக மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளதோடு பிணக்குகளும் நம்பிக்கை அற்றநிலையும் அதிகரித்துள்ளன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தற்போதையஜனாதிபதி நாட்டை வெற்றிக்கு இட்டுச் சென்றார் என்பதுஉண்மை ஆனால் அந்த வெற்றிக்கு சிங்கள, தமிழ்,முஸ்லிம் சமூகங்களும் அளப்பரிய ஆதரவைவழங்கியுள்ளதோடு பல தியாகங்களையும் புரிந்துள்ளன.ஆனால் யுத்தத்துக்குப் பிந்திய ஜனாதிபதியின்செயற்பாடுகளும் ஆட்சியும் யுத்தத்தின் வெற்றிக்குப்பங்களிப்புச் செய்த பல சமூகங்களின்பங்களிப்புக்களையும் தியாகங்களையும்; மறந்த நிலையில்காணப்படுகின்றமை ஆழமான கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

யுத்தம் முடிவடைந்த பின் கடந்த நான்கு வருடங்களில் இனமுரண்பாடுகளையும் சமய முரண்பாடுகளையும் நோக்கி இந்தநாட்டை இழுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில்சமய வழிபாட்டுத்தலங்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை.ஆனால் இவற்றை கண்டித்து ஒரு வார்த்தை கூட வெளியிடாமல்ஆளும் கட்சியும் அதன் தலைவர்களும் ஒருவருக்கொருவர்வித்தியாசம் இன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.சம்பந்தப்பட்டவர்கள் விடுபாட்டு உரிமையுடன் சட்டத்தை மீறஅனுமதிக்கப்பட்டனர். ஆட்சியாளர்கள் தான் இந்தவன்முறைகளின் பின்னால் இருக்கின்றார்கள் என்றஅச்சமான எண்ணத்தை இது தோற்றுவித்தது.

பாராட்டத்தக்க அபிவிருத்திகள்முன்னெடுக்கப்படுகின்றன.ஆனால் நாட்டின் மீது பாரியகடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் இன்னும் மூன்று தலைமுறைக்காவது இந்தக் கடன் சுமையை இந்த நாடுசுமக்க வேண்டியுள்ளது. இதே நேரம் வாழ்க்கைச் செலவு எட்டமுடியாத உச்சத்துக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த நாடு தெளிவானதோர் மாற்றத்தைஎதிர்ப்பார்க்கின்றது. இந்த நாட்டுக்குத் தேவையானமாற்றம் வெறும் ஆளும் வர்க்கத்தின் மாற்றம் அல்ல.தற்போதைய அரசியல் கலாசாரமே மாற்றப்படவேண்டும்என்பதுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பு. அதை ஏற்படுத்தபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதிபூண்டுள்ளார். மக்கள் நிகழ்ச்சி நிரல் ஆவணத்தின் மூலம் இதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தஇலக்கை அடைய அர்ப்பணத்துடன் பணியாற்ற தேசிய ஐக்கியமுன்னணி உறுதி பூண்டுள்ளது. இந்த வெற்றியானதுமாற்றத்துக்கான மக்கள் சக்தியின் வெற்றியாகஅமையும்.

ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.எம். சுஹைர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :