எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (02.12.2014) மாலை கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பு புதிய நகரமண்டபத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி இம்தியாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.
அத்துடன் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஸ்தாபககர் மாதுளுவாவே சோபித தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி MM.சுஹைர், NFGGயின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
இதன்போது முன்னாள் புத்தசாசன பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான MKDS. குணவர்தன மேல் மாகாணசபை உறுப்பினர்களான பைரூஸ் ஹாஜியார், இஸ்திகார் முஹம்மத், வடக்கு மாகணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினர் ALM.சபீல் உட்பட கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment