பொது எதிரணியின் MOUவில் NFGGயும் கைச்சாத்திட்டது-படங்கள் இணைப்பு

பொது எதிரணிக் கூட்டமைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இன்று கைச்சாத்திட்டது.

கொழும்பு விஹாரமகா தேவி திறந்தவெளி அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் NFGGயின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தியும் இந்நாட்டின் ஆட்சிமுறை மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகவும் ஒன்று சேர்ந்துள்ள பொது எதிர்கட்சிகளின் கூட்டமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.

'ஒன்று படுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்' என்ற மகுடத்தோடு நடைபெற்ற இந்நிகழ்வில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஸ்தாபககர் மாதுளுவாவே சோபித தேரர், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அர்ஜுன ரணதுங்க, அசாத் சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தன் நிகழ்வில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கள் உள்ளிட்ட 25ற்கு மேற்பட்ட அமைப்புகள் கைச்சாத்திட்டன.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மற்றும் அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், சட்டத்தரணி இம்தியாஸ், சிராஜ் மஸ்ஹூர், முஹம்மத் ஸப்றி ஆகியோர் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :