இன்று 2ஆம்திகதி காலை 9.00 மணிக்கு கூடிய கிழக்கு மாகாணசபை மீண்டும் ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு. முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரும் அ. இ. மக்கள் காங்கிரஸ் 3 பேரும் இன்று காலை ஆரம்பித்த மாகணசபையின் அமர்வுக்கு சமுகமளிக்கவில்லை.
நேற்று 1ஆம் திகதி ஆளுரிணதும், முதலமைச்சரினதும் நிதிதிட்டம் வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது கோரம்மின்மையால் இன்று 9மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய அமர்வுக்கு மு.காங்கிரஸ் 2 உறுப்பினர்கள் சமுகமளிக்க வில்லை.
இன்று மீண்டும் சபை கூடியபோது மு.கா. 2 அமைச்சர்கள் உட்பட 7 உறுப்பினர்களும், அ.இ.மக்கள் காங்கிரஸ் 3 உறுப்பிணர்களும் சபைக்கு வராமையைத் தொடர்ந்து சபைத் தலைவர் மீண்டும் ஜனவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் .
கிழக்கு மாகாணசபை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனி கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. அதேபோன்று கிழக்கு மாகணசபையை முஸ்லீம் காங்கிரஸ் கவிழ்பதற்கே முஸ்தீபு என அவதாணிகள் தெரிவிக்கின்றன.
அதே போன்று ஏற்கனவே ஊவா, மேல்மாகணம், வடமேல் மாகாணசபைகளும் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுமென கருதி அந்தந்த மாகாணசபைகள் ஜனாதிபதித் தேர்தலின் பின் மீண்டும் கூடுவதற்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment