நாட்டில் தொடர்ச்சியாக மழைபெய்துவரும் நிலையில், பொகவந்தலாவை லொய்னோர்ன் தோட்டத்தில் வீடொன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு 11.45 அளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும், மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நன்றி: N1st



0 comments :
Post a Comment