முஸ்லிம் விரோத பொதுபலசேனாவும், இராவண பலயும் இருக்கும் இடத்தில் முஸ்லிம்களுக்கென்ன வேலை

இக்பால் அலி-

னாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கு தம் முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாக என பொது பல சேனாவும் மற்றும் இராவண பலயவும் பகிரங்க அறிக்கை விடுத்துள்ள நிலையில் முஸ்லிம்களை கடந்த இரண்டு வருடங்களாக துன்புறுத்தி உயிர் உடமைகளுக்கு பெரும் சேதத்தை உண்டு பண்ணிய தீய சக்தியைச் சார்ந்த அணியுடன் கைகுலுக்கின் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக போராடுகின்றோம் எனக் கூறிக் கொண்டு முஸ்லிம் கட்சிக்காரர்கள் கூட்டுச் சேர்ந்திருப்பது எந்த வகையில் நியாயமானது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீமுடைய இல்லத்தில் இன்று 03-012-2014 நடைபெற்றது. அதன் போது அவர் இதனை இங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்

மறைந்த ஏ. ஸீ. எஸ். ஹமீட், எம். எச். எம். அஷ;ரப், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், செர் ராசிக் பரீத் என்கின்ற பெரும் அரசியல் தலைவர்கள் சமூக நலன் சமூக உணர்வுகளுடன் செயற்பட்டார்கள் என்பதை முஸ்லிம் நன்கு அறியும்.

முஸ்லிம்களுக்கு உரிமைக் குரல் கொடுக்கின்றோம் போராட்டம் நடத்துகின்றோம் எனக் கூறுகின்றவர்கள் என்னதான் தீர்மானம் எடுத்தாலும் முஸ்லிம்கள் ஏற்கெனவெ தீர்மானம் எடுத்து விட்டார்கள். பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொது அபேட்சகர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிப்பதற்காகும்.

இந்தக் கட்சியிலுள்ளவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புக்களுக்காக செயற்படுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக இஇருந்தாலும் சரி தங்களுடைய சுலா இலாபத்திற்காகச் செயற்படுகின்றார்கள் என்பதை இன்று மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டனர். எமது சமூகம் தலைசிறந்து வாழ வேண்டுமாயின் தேசிய கட்சியுடன் கைகோர்த்துச் செல்வதே சதாச் சிறந்ததாகும். சிறுபான்மையின மக்களை அனுசரித்துச் செல்லக் கூடிய ஒரே ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனவே முஸ்லிம் சமூகம் பொது வேட்பாளர் அவர்களை ஆதரிப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :