இக்பால் அலி-
சமூகத்தில் கவனிப்பாரற்றுக் காணப்படும் விசேட தேவையுடைய சிறார்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். எமது ஜனாதிபதி 2015 வரவு செலவு திட்டத்தின் போது போக்குவரத்துச் செலவுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வடமேல் மாகாணத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே போன்று எங்களுடைய ஜனாதிபதி நாட்டிலுள்ள அனைத்து விசேட தேவையுடைய சிறார்களையும் கனவத்திற் கொண்டு செயற் திட்டம் மேற் கொள்ளப்படுகிறது. எதிர் காலத்தில் சமூச சேவை அமைச்சின் மூலம் மேலும் 750 ரூபா பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்று வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
வடமேல் மாகாண சபையின் சமூக சேவை அமைச்சு ஏற்பாட்டில் சர்வதேச ஊனமுற்றோர் விசேட நிகழ்வு வடமேல் மாகாண கேட்போர் கூடத்தில் இன்று 2014-12-03 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார். வடமேல் மாகாணத்தில் விடேச தேவையுடைய மத்திய நிலையங்கள் 19 உள்ளன. இதிலுள்ள 405 சிறார்களுக்கு முதல் அமைச்சரின் தனிப்பட்ட சொந்த நிதியிலிருந்து சீருடைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன,
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
வடமேல் மாகாணத்தில் 800 பேர் அளவிலான விசேட தேவையுடைய சிறார்கள் உள்ளனர். இது ஒரு மனவேதனையைத் தரும் செய்தியாகும். இவர்களை நாங்கள் கை விட முடியாது. அவர்களும் ஏனைய பிள்ளைகளைப் போல பிள்ளைகள்தான். இந்தச் சிறார்களுக்கும் ஏனைய சிறார்களுக்குரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படுதல் வேண்டும். சமூக அங்கீகாரமற்ற சிறார்களை சமூக அங்கீகாரம் வழங்கி கட்டி எழுப்பதல் வேண்டும்.
அத்துடன் எமது ஜனாதிபதி பிரதேச செயலாளர் மட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 விசேட தேவையுடைய சிறார்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா விகிதம் கொடுப்பனவு செய்தவற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் எந்த ஜனாதிபதியும் செய்யாத பாரியளவிலான அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்கள் அதேபோல கிராமிய மட்டங்களிலும் அதற்குச் சமனான அபிவிருத்திப் பணிகள் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பலல்ல, வட மேல் மாகாண சமூக சேவை சிறுவர் நலன்புரி விவசகார அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment