பாடசாலைகளின் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு எதிர்காலத்தில் மாணவர்களுக்கு மத்தியில் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வினை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் ஒரு தூரநோக்கு செயற்பாட்டின் அடிப்படையில் ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் கல்வி, கலை, விளையாட்டு துறைகளில் பின்தங்கி இருப்பவர்களை ஒன்றினைத்து குறிப்பிட்ட துறைகளில் மானவர்களை ஊக்குவிக்கும் முகமாக நேற்று 04.12.2014 வியாழக்கிழமை ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் 2014 ஆமாண்டுக்கான மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றமையானது மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியில் ஒரு வித்தியாசமான சிந்தனையாகவே எல்லோராலும் பார்க்கப்பட்டது.
கல்லூரியின் கேட்போர் கூடத்தில் உடற்கல்வி ஆசிரியர் ACM.ஃபிர்னாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பாடசாலையில் 6,7,8,9 வகுப்புகளில் மெல்ல கல்விகற்கின்ற மாணவர்களின் கல்விசார்ந்த கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இச்செயற்பாட்டின் முக்கியத்துவம் பற்றியும், எதிர்காலத்தில் மாணவர்களின் பங்களிப்பானது இச்செயற்திட்டத்துக்கு எவ்வாறு துணை நிற்கப்போகின்றது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வைபவத்துக்கு பிரதம அதீதியாக கல்லூரியின் முதல்வர் MLM.ஜுனைட் அவர்களும் ஏனையா அதீதிகளாக பிரதி அதிபர் MA.ஹலீம் இஸ்ஹாக், ALM.கபீர் ஆசிரியர், பிரதேச சபை உறுப்பினர் SA.அன்வர் ஆசிரியர் ஆகியொர் கலந்து சிறப்பித்ததுடன் இவ்விழாவுக்கான பரிசுகள் அனைத்தையும் கல்லூரியின் அதிபர் MLM.ஜுனைட் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்ததுடன், பிரதேச சபை உறுப்பினர் SA.அன்வர் அவர்களினால் ஏனைய செலவுகள் அனைத்தும் பொறுப்பேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment