மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம், உலக உளநல தினத்தை முன்னிட்டு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான 'உளவியல் விருது' வழங்கும் நிகழ்வு நிலைய பணிப்பாளர் திருமதி.தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன பணிப்பாளர் நாயகம் வி.ரஞ்சிதமூர்த்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு இணைப்பாளர் ஏ.சி.ஏ அசீஸ், வவுணதீவு சுகாதார வைத்திய கலாநிதி.ரி.கலைச்செல்வி ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். உளநல சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தையல் இயந்திரம் மற்றம் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment