சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுமா..? அது ஸ்ரீ.மு.கா வினால் மட்டுமே முடியும்



எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறை மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற வேண்டுமானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே பெற முடியும். இதனை கடந்தகால தேர்தல்கள் சான்றுபகிர்கின்றன. சம்மாந்துறையில் இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கடந்த பல வருடங்களாக ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்ததன் பயனாக இலக்கப்பட்ன இன்று சம்மாந்துறை மக்கள் அரசியல் அனாதைகளாக அனுபவித்துவரும் கஸ்டத்திற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சம்மாந்துறை மக்கள் சிந்தித்து வாக்களிக்க கடமைப்பட்டுள்ளனர்.

இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே இழந்த பாராளுமன்ற பிரதிநிதியை பெறமுடியும் மறாக ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கோ, ஜக்கிய தேசியக் கட்சிக்கோ, ஏனைய கட்சிகளுக்கோ வாக்களித்து பெற முடியாது என்பதை நன்குபுரிந்து கொள்ள வேண்டும்.

சம்மாந்துறையின் அரசியல் வாரலாற்றை எடுத்து நோக்கினால் இவிவடயம் மக்களுக்கு தெளிவாக புரியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சவூதி தூதுவர் ஆலய வெகுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் உரையாற்றும்போது தெரிவித்தார். 

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிச்சல் பிரதேசத்திலுள்ள சஸ்டா சங்கத்தில் அங்கத்தவர்களாகவுள்ள 30 குடும்பங்களுக்கு அரிசி உற்பத்தியாளர்களுக்கு நெல் அவிக்கும் சட்டி மற்றும் இறப்பர் பாத்திர உபகரணங்கள் என்பன நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சவூதி தூதுவர் ஆலய வெகுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்pடம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சுயதொழில் முயற்;சிக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு சஸ்டா சங்கத்தின் தலைவி எம்.எம்.ரசீனா தலைமையில் திறந்தவெளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் சவூதி தூதுவர் ஆலய வெகுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதன்போது ஆசிரியர் எம்.ஏ.மஜீட், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ரஸ்மீன், ஏ.வீ.எம்.ஹாரீஸ், பிரதிநிதிகள் வை.பீ.சலீம், எம்.ஜே.எம்.இர்பான் (மௌலவி) உயர் அதிகாரிகள், சஸ்டா சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :