அமைச்சர் ஹக்கீம் மலேசியா பயணம்...

நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேஷியா பயணமானார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஹக்கீம், அந் நாட்டின் நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சரை சந்திப்பதோடு, வர்த்தக மன்றம், மலேஷிய சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

அங்கு 'நன்கு ஒன்றிணைக்கப்பட்ட உலகம் - தேசத்தைக் கட்டியெழுப்புவதில் எதிர்நோக்கும் சவால்கள்' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் கலந்துரையாடலில் வளவாளர் ஒருவராகவும் அமைச்சர் பங்குபற்றி கருத்துரை வழங்குவார்.

அத்துடன், கோலாலம்பூரில் நடைபெறும் மலேஷியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (உம்னோ) வருடாந்த மாநாட்டிலும் அவர் கலந்துகொள்வார்.

அமைச்சர் ஹக்கீமுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் மலேஷியா சென்றுள்ளனர்.

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :