2015ஆம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையின் தவிசாளர் கரு ஜயசூரிய களமிறங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
பொது வேட்பாள் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் இன்று கோட்டை நாக விகாரையில் முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது.
இதில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக கரு ஜயசூரியவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment