சரிந்தது கொழும்பு மிதக்கும் சந்தை!

கொழும்பு, புறக்கோட்டையில் 150 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கத்தினால் அண்மையில் நிர்மாணித்த மிதக்கும் சந்தையின் கடைகள் சில சரிந்துள்ளதோடு, மேலும் சில கடைகள் சரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் நெறியாள்கையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை நிர்மாணித்த இக்கடைகள் கடந்த ஒகஸ்ட் 22ஆம் திகதி அமர்க்களமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தன.

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் பொறியியல் பிரிவுகள் ஒன்றிணைந்தே இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மழைக் காலம் என்பதால் இந்த மிதக்கும் சந்தைகள் சரிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :