முஹம்மட் ஜெலீல்-
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குற்பட்ட பாலமுனையை சேர்ந்த சகோதரி ஒருவர் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக வந்து அவ்வீட்டு எஜமான்களால் பல இன்னல்களையும், கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பதாக அதே வீட்டில் சாரதியாக பணிபுரியும் இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் ஒருவர் எனது நண்பர் ஒருவரிடம் கூறியதையடுத்து இத் தகவலை பாலமுனை பிரதேசத்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன்.
அவ்வீட்டு சாரதி மேலும் கூறுகையில் அச் சகோதரி இங்கு வீட்டு பணிக்காக வந்து ஒரு வருட காலங்களாகியும் இலங்கையில் உள்ள அவர் பெற்றோர்களோடு தொடர்புகொண்டு பேசுவதற்கு அவ்வீட்டு எஜமான் அனுமதியழியாதவாரும் கொடுமைபடுத்துவதாக கூறியுள்ளார் தன் நிலைமையை எப்படியோ யாரிடமாவது தெரியப்படுத்தி நாடு திரும்பவேண்டுமென்ற நோக்கத்தோடு அவ்வீட்டில் எஜமான் இல்லாத நேரம்பார்த்து அச்சாரதியிடம் தன் நிலைமையை கூறிய பணிப்பெண் இதற்கு ஓர் வழியை பெற்றுத்தருமாறு அழுது தவித்துக்கொண்டிருப்பதாக அச்சாரதி கூறினார்.
உண்மையில் இதுவொரு வேதனைக்குரிய விடையமாகும். இது போன்று எத்தனையோ பெண்கள் குடும்ப வறுமைகாரணங்களாக வெளிநாடு சென்று பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது மிகக் குறைந்தளவே வெளியில் தெரியவருகின்றது.
ஆகையால் கருணையுள்ளம் கொண்டு பாலமுனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இதை உங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு உங்கள் பிரதேசத்தில் இதுபோன்ற நிலையில் யாரேதும் சகோதரிகள் சவுதி அரேபியாவுக்குவீட்டு பணிப்பொண்ணாக வந்து தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதாயின் இப் பெண்ணுக்கு வேலை பெற்றுக்கொடுத்த நிறுவனத்தோடு தொடர்புகொண்டு இச் சகோதரியை மீட்டெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

0 comments :
Post a Comment