சகல எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொதுஅபேட்சகர் ஒன்றை நிறுத்துவது பற்றிய ஊடகவியாலாளர் மாநாடு





அஷ்ரப் ஏ சமத்-

ன்று கொழும்பு அத்துல்கோட்டேயில் உள்ள சால் ஹோட்டலில் சகல எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொதுஅபேட்சகர் ஒன்றை நிறுத்துவது பற்றிய ஊடகவியாலாளர் மாநாடு நடைபெற்றது.

சகல அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழித்துக்கட்டுவது. என்ற தலைப்பில் இம் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.
இதற்காக ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பே நாடு முழுவதும் மக்களுக்கு விழிப்பூட்டுவது அல்லது மக்களை பாதைக்கு அழைத்து தற்போதைய அரசுக்கு எதிராக மன்றாடுவது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டடன.
இந் நிகழ்வு நல்லாட்சி மக்கள் அமைப்பின் தலைவர் சோபித்த தேரர் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது சட்டத்தரணியினால் வாசிக்கப்பட்டு அவரது கருத்துக்களை கையெழுத்திட்டிருந்தார். அவரும் இம்முறைமை ஒழிக்கப்பட்டு 17அரசியல் யாப்பினை அமுல்படுத்துவதாக எழுதிய வெளியீடு ஊடகங்கவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க - 17ஆவது அரசியல் யாப்பை நாம் அமுல்படுத்த வேண்டும் அதில் சுயாதீன தேர்தல், சுயாதீன பொலிஸ் போன்ற விடயங்களை முன்வைத்தார். ஜனாதிபதித் தேர்தலை முன்வைப்பவராக மஹிந்த ராஜபக்ச விளங்குகின்றார். அரசை அவர்களது அடிவருடிகளையுமே பொலிசார் பாதுகாக்கின்றனர். மக்களை அவர்கள் நாட்டை பாதுகாக்கவில்லை. எனத் தெரிவித்தார்.

அசாத் சாலி - அலறி மாளிகையை கொழும்பு மாநரக சபைக்குச் சொந்தமான பாதையை வழிமறித்து 20ஆயிரம் பேருக்கு தன்சல வழங்கும் வகையில் மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. . நேற்று மட்டும் 26ஆயிரம் அரச ஊழியர்களை அங்கு ;அழைத்துவரப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். இது யாருடைய பணம் மக்களின் பணம், யாழ்ப்பாணத்தில சரஸ்வதிதெய்வம் கதிர்காமத்தில் கத்தரகம தெய்வம் 2இலட்சம் டிசேட் அடித்து அவர் எல்லா விடத்திலும் தேர்தல் கம்பெயின் செய்கின்றார். ஆனால் தேர்தல் ஆணையாளர் தூங்கிக் கொண்டு இருக்கின்றார். சகல உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் அழைத்து 2கிழமைக்கு முனனே அலரிமாளிகையில் தீப்பை சொல்லிவிட்டு இப்ப தான் 3வது முறையும் கேட்க முடியுமான என நீதிமன்ற ஆலோசனையைக் கேட்கின்றார்.

டயஸ்போரவுக்கு நிதி வழங்கியவர் மஹிந்த ராஜபக்சவே 2005ல் அவர் ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுக்கும்; டயடஸ்போரவுக்கு பணம் வழங்கி தமிழ் பிரதேசங்களில் ரணிலுக்கு வாக்கு அளிப்பதை தடுத்து நிறுத்தித்தான் தேர்தலில் வெற்றிபெற்றார். இதனை பாராளுமன்ற உறுப்பிணர் டிரான் அலஸ் ஊடகங்களில் சொல்லியிருக்கின்றார்.

மனோ கனேசன் - இந்த பொது அபேட்சகரில் யாரும் இனவாதத்தை பேசாத்தேவையில்லலை இந்த ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
நவசிகல உருமைய - இந்த ராஜபக்ச குடும்பத்தை உடன் தோற்கடித்து அவர்செய்த ஊழல்களுக்கு சிறையில் அடைக்க வேண்டும்.

சரத்பொண்சேகா – கடந்த முறை நான் பொது அபேட்சகராக வந்து சிறை அனுபவிக்கின்றேன். ஆனால் நான் சிறையில் உணவு உன்னும்போது யாரும் வரவில்லை. வேறு பொது அபேசட்சகர் மரணப்பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளும் ஒருபவராக திகழ வேண்டும். இப்பொழுது வரும் பொது அபேட்சகர் என்பவர் பதவி கிடைத்தவுடன் எவ்வாறு செயற்படுவார் என்பது தெரியாது. இந்த சனாதிபதி முறைமையை நாம் ஒழித்து பாராளுமன்ற முறைமையை கொண்டு வருதல் வேண்டும். 

மேலும் சிறிய கட்சிகளின் தலைவர்கள், பல்கழைக்கழக தொழிற்சங்கங்கள் என பலர் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
ஜ.தே.கட்சி கரு ஜயசுரிய, கபீர் காசீம், ரவி கருநாயக்க யோகராஜன், மலிக் விக்கிரம போன்ற அரசியல்வாதிகளும் இம்மாநாட்டில் சமுகமளித்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :