மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் படையணி தின நிகழ்வு






பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் படையணி (Troops’day 2014) தின நிகழ்வு நேற்று மாலை (06-11-2014) கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டார்.

 அதிதிகளாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி எம்.எச்எம்.மன்சூர்,விரிவுரையாளர் எம்.ஐ.அமீர்,உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார். உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.இப்றாகீம்,ஓய்வு பெற்ற அதிபர்களான ஏ.ஆர்.எம்.தவ்பீக்,ஐ.எல்.ஏ.மஜீத்,ஓய்வு பெற்ற கல்விக் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, கம்பணி கமாண்டர் லெப்டினன் கே.எம்.தமீம்,சிரேஸ்ட சாரனியத் தலைவி ஆசிரியை திருமதி உவைஸ் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் நியாஸ் எம் அப்பாஸ்,பழைய மாணவர் சங்கச் செயலாளர் பஸீல், பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஸர்ரப் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியர்களான லெப்டினன் எம்.எஸ்.எம்.நிப்றாஸ் கான், 2ம் லெப்டினன் எம்.ஐ.எம்.சுல்பிகார் ஆகியோரின் நெறிப்படுத்தலில் கடேட், பேன்ட, முதலுதவி, சாரனியம் ஆகிய மாணவர் படையணிகலைச் சேர்ந்த 193 மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றம் விருதுகள் வழங்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிதிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :