எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியில் பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் பிரதான எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களை நேற்று சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்களையடுத்து ஜனாதி பதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐ.தே.க.வின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரிய, கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் ஆகிய நால் வரில் ஒருவரையே எதிர்க்கட்சிகளின் சார் பில் பொதுவேட்பாளராக நியமிப்பது என்று
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின்
சார்பில் தெரிவுசெய்யப்படும் நால்வரில் ஒருவர் பொதுவேட்பாளராக போட்டியிடுவார். இது குறித்து மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் மீண்டும் சந்தித்து பேசவுள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் மாநாடொன்றும் நடாத்தப்படவுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பிலும் அரசாங்கத்தின் ஆட்சியினை வீழ்த்துவதற்கான பொது எதிரணி ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் கடந்த காலங்களில் இருந்து சகல எதிர்த்தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த நிலையில் நேற்றும் பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கோட்டை நாக விகாரையில் இந்தச் சந்திப்புகள் இடம்பெற் றுள்ளன. அதேபோல் முன்னாள் அரசியல் பிரமுகர்களுடனும் பேச்சுவார்த்தைகளை மாதுலுவாவே சோபித தேரர் மேற்கொண்டுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சிகளுடன் பேச்சு
குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியினை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முக்கிய கட்சி உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, சோஷலிசக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பிரதான அமைப்புக்களுடனும் நேற்று மாதுலுவாவே சோபித தேரர் சந்திப்பினை மேற்கொண்டார்.
சந்திரிக்காவுடன் பேச்சு
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவவையும் அவர் நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு விஜயத்தினை மேற்கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பிய சந்திரிக்கா குமாரதுங்க நேற்று காலை கோட்டை நாக விகாரையின் விகாரதிபதி மாதுலுவாவே சோபித தேரர் சந்தித்துள்ளதோடு பொது நிகழ்ச்சி நிரலில் பொது எதிரணியொன்றினை உருவாக்குவது தொடர்பிலும் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
virakesarik>

0 comments :
Post a Comment