பி.எம்.எஸ் கல்விநிலையத்தின் ஊடகவியலாளர் மாநாடு!

அஷ்ரப் ஏ சமத்-

லங்கையில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானம் எண்னிக்கையை அதிகரிக்கும் ;நோக்குடன் வெள்ளவத்தையில் உள்ள  பி.எம்.எஸ். BMS வர்த்தக முகாமைத்துவ பாடசாலை பாரிய அளவில் செயற்பட்டு வருகின்றது. 

இப் பாடாசலை பிரிட்டணில் நோத்தம்பிரிய பல்கலைக்கழகத்துடன் பங்குதார் அடிப்படையில் இணைந்து வர்த்தக முகாமைத்துவ  துறையில் 1200 மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. என பி.எம்.எஸ் கல்விநிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி  நிசாம் ரசாக் தெரிவித்தார்.

இன்று வெள்ளவத்தை குலோபல் மரைன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்படி தகவல்  தெரிவிக்கப்பட்டன. இந் நிகழ்வில் பி.எம். எஸ் பிரிட்டிஸ் கல்விநிலையத்தின் தலைவர் டப்ளியு. ஏ.விஜயவர்ததன மற்றும்  பேராசிரியர் ரவீந்திர பெர்ணான்டோ கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

இக் கல்விநிறுவணத்தில் பயிண்ற 125 முஸ்லீம் தமிழ் சிங்கள பட்டதாரிகள் 340 டிப்ளோமா தாரிகளுக்குமான  பட்டமளிப்பு விழா நாளை 20ஆம் திகதி பி.பகல் 05.00 மணிக்கு பி.எம்.ஜ.சி.எச் ல் நடைபெறவுள்ளது. 

லண்டனில் 20 இடத்திலும் உலகில் 160ஆவது இடத்திலும் நோத்துமபிரியா பல்கலைக்கழம் உள்ளது. இலங்கை, மாலைதீவு, பாக்கிஸ்தான், நைஜீரியா மாணவர்களும் வெள்ளவத்தையில் உள்ள பி.எம்.எஸ் கல்வி நிலையத்தில் பயின்று லண்டணில் இறுதி ஆண்டுக்காக அங்கு சென்று கல்விகற்று வருகின்றனர். 

இலங்கையில் பல்வேறு தணியார் நிலையங்களிலும் முகாமையாளர்கள், சந்தைப்படுத்தல்;, ஆகியோர் தமது தொழில்செய்துகொண்டு தமது படிப்பை முடித்து எம்.பி.ஏ மற்றும் மேற்படிப்புக்களை பயில்வதற்கு எமது கல்வி நிலையம் வழிசெய்துள்ளது. 

இலங்கையில் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவில் பதிவுசெய்து அங்கீகரிககப்பட்டு உலக நாடுகளில் பிரச்சித்திபெற்ற பல்கலைக்கழகத்திண் ஒரு நிறுவணமாக கொழும்பில் உள்ள பி.எம். எஸ் விழங்குகின்றது.

எமது கல்விநிலையத்தின் விஞ்ஞான பட்ட படிப்பு கெம்பஸ் எதிர்வரும் 21ஆம் திகதி பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கசுனிக்க ஹிம்புருகமவேவும் மற்றும் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துருசிஙகவும  கலந்து கொண்டு புதிய பல்கலைக்கழகத்தினை திறந்து வைப்பார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :