அமைச்சர் சாலிந்த திசாநாயகவினால் வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கும் வைபவம்!

 இக்பால் அலி-

தாயின் ஆதரவின்றி இருதய நோயுற்ற தந்தையின் பராமரிப்பில் ஓலைக் குடிசையில் வாழ்ந்த கண்பார்வையற்ற நான்கு வயதுடைய கசுன் என்ற சிறுவனுக்கு சிறுது காலம் கும்பங்லங்க சாலிந்தபுர என்ற பிரதேசத்தில் முஸ்லிம் நபர் ஒருவரின் தோட்டத்திலுள்ள வசதியான வீட்டில் வாழ்வதற்கு இடமளித்த நபருக்கு கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள எஸ். ஏ. ஜீ, ரி. 
தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் ஊழியர்கள் நன்றி பாராட்டினர்.

கொழும்பு துறைமுகத்தில் பணிபுரியும் எஸ். ஏ. ஜீ. ரி நிறுவனத்தின் ஊழியர்களுடைய நிதி உதவியின் மூலம் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் சாலிந்த திசாநாயகவினால் வழங்கப்பட்ட 15 பேர்ச் காணியில் ஐந்து இலட்சம் ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கும் வைபவம் 15-11-2014 சனிக்கிழமை நடைபெற்றது. சம்பராதாய முறைப்படி மு. ப. 10.50 மணிளயில் கண்பார்வையற்ற சிறுவனிடம் கையளிக்கப்பட்டது. அதன் போது அங்கு உரை நிகழ்த்திய எஸ். ஏ. ஜீ, ரி. நிறுவனத்தின் ஊழியர்கள் அங்கு இவ்வாறு நன்றி பாராட்டுகின்ற கருத்தை தெரிவித்தனர். 

இந்த சிறுவன் தொடர்பான செய்தி பத்திரிகையில் பிரசுரமாகிய இருந்தன. இந்தச் சிறுவனை பராமரிக்க தாய் இல்லை. அவர் இந்தச் சிறுவனை விட்டுப் போட்டு நாட்டில் வேறு இடத்தில் வாழ்கின்றார். தந்தை ஒரு இருதய நோயாளி. இருக்க இடமில்லை. பௌத்த சமயத் தலைவர்கள் தான் சிற்சில உதவிகள் புரிகின்றனர் எனச் சுட்டிக் காட்டி விரிவான செய்தியொன்று பிரசுமாகி இருந்தது. எமது துறைமுக ஊழியர்கள் இந்த பத்திரிகையின் செய்தியைப் படித்த பிற்பாடு கொழும்பிலிருந்து மிக் நீண்ட தூரம் குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்திற்கு வருகை தந்து குறித்த சிறுவன் வாழும் ஓலைக் குடிசை வீட்டை அடையாளம் கண்டனர். அதன் பின் அந்தச் சிறுவன் வாழ்வதற்காக ஒரு வீட்டை நிர்மாணித்துக் கொடுக்கத் தீர்மானம் எடுத்துக் கொண்டு அந்தப் பிரதேச அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவை நாடிய போது தான் 10 பேர்ச் காணி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்தக் காணியில் துறைமுக தனியார் ஊழியர்கள் தங்களுடைய சொந்தச் சம்பயப்பணத்தை சேகரித்து இந்த வீட்டு நிர்மாணப் பணியை மேற்கொண்டனர்.

 அது மாத்திரமல்ல அவ்வீட்டுக்குத் தேவையான தளபாடப் பொருட்களையும் அங்கு விஜயம் செய்த ஒவ்வொரு ஊழியர்களும் அன்பளிப்பாக கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

இதற்கு முன் அறுவை மாடுகளை வாங்கி விடுவித்தல் என்கின்ற சேவையைத் நாங்கள் செய்து கொண்டிருந்தோம் . அது பிழையான சேவையென பௌத்த மத குரு ஒருவர் சுட்டிக் காட்டியதன் பிரகாரம் அதனைத் தவிர்த்துவிட்டு தற்போது வீடுகள் நிர்மாணித்துக் கொடுத்தல் மற்றும் இன மத வேறுபாடுகளின்றி வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல் போன்ற மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றோம் எமது இவ்வாறு இந்த மனிதாபிமான செயற்பாடுகளைச் செய்யக் கூடியவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இதில் முக்கியமாக தங்களிடம் பெரிய வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும் தம் ஊதியப் பணத்தை சமூக சேவைக்காக ஒதுக்கி செயற்படுவோர்கள் மிகக் குறைவு. அரச மற்றும் தனியார் ஊழியர்கள், சமய ஊழியர்கள், தனவந்தர்கள் எனப் பல தரப்பட்டோர் எம் நாட்டில் கொழுத்த சம்ளம் பெறுவோர்கள் உண்டு. எங்களைப் போன்று கருணை மிக்க மனிதாபிமான செயற்பாடுகளைச் செய்ய முன்வருதல் வேண்டும். இவ்வாறு இந்த நல்ல மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் போது இந்த நாட்டில் இன, மத, எல்லை பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் எமது நாட்டுக்குள் ஒன்று பட்ட மக்களாக வாழ முடியும் என்று அவ்வூழியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :