அதிக முகநூல் விருப்புக்களைக் கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்

எஸ்.எம்.அறூஸ்-

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை சுமார் 41000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

முஸ்லிம் தேசிய அரசியலில் சமூகப் போராட்டத்திற்கான செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பேஸ்புக் பக்கம் அண்மைய வாரங்களில் மிகக் கூடுதலான லைக்கைப் பெற்றுள்ளது.

தேசிய அரசியலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக அண்மைக்காலமாக காத்திரமான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதால் ஹரீஸ் எம்.பி.யின் பேஸ்புக் பக்கத்தை கூடுதலான பேஸ்புக் பாவனையாளர்கள் லைக் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் இளம் அரசியல் பிரமுகர்களில் ஆகக் கூடுதலான பேஸ்புக் லைக்கைப் பெற்றவராக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் விளங்குகின்றார்.

அண்மைக்காலங்களில் இந்தியாவில் அதிரடி அரசியல் பிரவேசம் ஒன்றை மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் அவர்களின் பேஸ்புக் பக்கம் குறுகிய காலத்திற்குள் திடிரென பிரபலமானது.

குறுகிய காலத்திற்குள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அவரின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்திருந்தனர். இந்தியாவின் சனத்தொகையையும் அங்குள்ள இணைய பாவனையாளர்களை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பேஸ்புக் பக்கத்தின் லைக் அதிகரிப்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அவரது முகநூல் பக்கம்:

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :