ஹஜ்ஜை விட முக்கியம் பாடசாலைகளில் மௌலவிமார்கள் இஸ்லாம் கற்பிப்பது-இ. ஆ.ச வலியுறுத்துகின்றது

எம்.ஏ.தாஜகான்-

லங்கை முஸ்லிம்கள் மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றவென முறை யான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும். அதனூடாக ஒருவர் ஒரு தடைவையா வது ஹஜ் செய்வதற்கு வசதி  செய்து கொடுக்கப்படும். 

தற்போது இலங்கையில் வசதி குறைந்த முஸ்லிம்கள் மக்கா சென்று ஹஜ் 
கடமையை நிறைவேற்றுவது பகல் கனவாகவே உள்ளது இந்நிலைமை மாற்றியமைக்கப்படும்' என்ற அறிவிப்பொன்று அண்மையில் திருமலை சென்ற, அரபு உலகால் கலீபா பட் டம்  வழங்கிக் கௌரவிக்கப்பட்ட ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ளது. 

இது முஸ் லிம்களின் பெரும்  வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஊடகங்களில் பிரஸ்த்தாபிக்கப் பட்டுள்ளது.  கடமையாக்கப்பட்டவர்கள் கூட ஹஜ் கடiயை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை காணப்படும் இவ்வேளையில்,  ஜனாதிபதி அவர்களின் முற்போக்கான சித்தனை யினால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள்  அனைவரும் ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள,  ஜனாதிபதியின் முஸ் லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், கல்வி அமைச்சின் முஸ்லிம்  பிரிவு ஆலோசகருமான கலாநிதி அஷ்ஷய்க் ஹஸன் மௌலானா, அது வரவேற்கத் தக்க  செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தில் எல்லோருக்கும் ஹஜ்ஜைவிட கட்டாயமானது எல்லோருக்கும் மார்க் கக்கல்வி என்பதை  மறந்துவிட்டு, எல்லோருக்கும் ஹஜ்ஜை ஊடகங்களும் உல மாக்களும் வரவேற்றிருப்பது பெரும்  கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இறைதூது, 'இஹ்றஃ' ஓதுவீராக (கற்பீராக) என்றுதான் அழைப்பு விடுக்கின்றது. இஸ்லாம் ஆண்,  பெண் இருபாலாரும் மார்க்கக்கல்வி கற்பதைத்தான் கட்டாயமாக்கி யுள்ளது. அனைவருக்கும் கல்வியைக் 
கட்டாயமாக்கியுள்ள இஸ்லாம், மாறாக, அனைவருக்கும் ஹஜ்ஜைக் கட்டாயக் கடமையாக்கவில்லை. 

இஸ்லாத்தில் ஹஜ் கடமையாவதற்கான எட்டு நிபந்தனை(ஷர்த்துக்)களில் ஒன்றாக போதிய  பணவசதி இருப்பது, கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் எவ்வாறு எல்லோருக்கும் ஹஜ்ஜை  வரவேற்பது. இலங்கையில் வசதி குறைந்தவர்களுக்காக இந்நிலைமைகளை மாற்றியமைப்பது எந்தளவு 
பொருத்தமானது. 

இலங்கையில், முஸ்லிம்களுக்கு இதைவிட முக்கியமானது, முஸ்லிம் மாணவர்கள் கற்கும்  அனைத்துப் பாடசாலைகளிலும் இஸ்லாம் கற்பிக்க மௌலவி ஆசிரியர் களை நியமிக்க  வேண்டியது. வெற்றிடமுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாத் திரமின்றி, தமிழ், சிங்கள  பாடசாலைகளிலும் இஸ்லாம் கற்பிக்க மௌலவி ஆசிரி யர்கள் நியமிக்கப்பட வேண்டியது 
கட்டாயமானதாகும். 

இப்பாடசாலைகளில் இஸ்லாம் கற்பிக்க தகுதியான ஆசிரியர்கள் இன்மையால்,  அம்மாணவர்கள் இந்து, பௌத்த சமய பாடங்களை கற்க நிர்ப்பந்திக்கப்பட்டு வரு கின்றனர். 

மாற்று மதப்பாடசாலைகளில், மாற்று சமயப் பாடங்களைக் கற்று, மாற்று மதகலாசாரங்களைப் 

பின்பற்றிவரும் இம்மாணவர்கள் விடயத்தில், முஸ்லிம் அமைச் சர்கள், பாராளுமன்ற  உறுப்பினர்கள் உள்ளிட்ட, இந்த அரச தலைவர்களும், முஸ் லிம் விவகாரங்களுக்குப்  பொறுப்பானவரும், முஸ்லிம் பிரிவு ஆலோசகரும், ஊடகங் களும் உலமாக்களும் கவனம் செலுத்த  வேண்டியது கட்டாயமாகும்.

இதற்காக, சேவைப் பிரமாணக் குறிப்புக்கு புறம்பாக, வெற்றிடத்திற்கு மேலதிகமாக, வரவு  செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள, விரைவில் நியமிக்கத் திட்டமிடப் பட்டுள்ள 50  ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களுக்கு மேலதிகமாக, சேவைப் பிர மாணக் குறிப்பிற்கமைய,  வெற்றிடத்திற்கமைய, கோரப்பட்ட விண்ணப்பத்திற்கமைய, தகுதியான சகலருக்கும் எஞ்சியுள்ள 
நியமனங்கள் யாவும் வழங்கப்படல் வேண்டும்.

இந்நிலையில், முதல் தடவையாக, 2008.04.02ஆம் திகதிய அமைச்சரவைக் கூட் டத்தில் தமிழ்  மொழி மூலம் 595பேருக்கும், சிங்கள மொழி மூலம் 40பேருக்கும் மௌலவி ஆசிரியர்  நியமனம் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது

அதனைத் தொடர்ந்து, 2008.08.29ஆம் திகதிய 1565ஆம் இலக்க வர்த்தமானியில்,  விண்ணப்பங்கோரப்பட்டபோது, 2008இல் 212 பேரும் 2009இல் மிகுதி 212 பேருமாக  424 பேருக்கு இரண்டு கட்டங்களாக மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட விருப்பதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. 

அது, 09 மாகாணங்களிலுள்ள 23 மாவட்டங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப,  மாகாண பாடசாலைக்கு தமிழ் மொழி மூலம் 194, சிங்கள மொழி மூலம் 11, தேசிய  பாடசாலைக்கு தமிழ் மொழி மூலம் 05, சிங்கள மொழி மூலம் 02 என அமையும் எனவும்  அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்பிரகாரம் விண்ணப்பித்தவர்களுக்கு 2008.11.22ஆம்திகதி போட்டிப் பரீட்சையும்,  2009.11.27ஆம் திகதி நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு, நியமனங்கள் வழங்கவும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

அதற்கமைய, போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய 2715 பேர்களில் 324 பேர் சித்தி 
பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு, இவர்களில், 134முதல் 90வரையிலான புள்ளிகள் பெற்ற  205 பேருக்கு 2009.12.09இல் நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர்  அது பிற்போடப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது தடவையாக, 2010.01.14 திகதிய அமைச்சரவைக் கூட் டத்தில் 615  பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்க அனுமதிக்கப்பட்டி ருந்தது.

இதனையடுத்து, பிற்போடப்பட்டிருந்த நியமனங்கள், முதல் கட்டத்தில் 99 பேருக் கும் அடுத்த  கட்டத்தில் 95 பேருக்கும் வழங்கப்படும் என 2010.02.03ஆம் திகதி கல்வி வலயங்களுக்கு  அறிவிக்கப்பட்டு, 2010.02.04ஆம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து  முதல் தடவையாக 111 நியமனங்கள் கல்வி அமைச் சரால் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து 31, 
பின்னர் 06 என மொத்தம் 148 பேருக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக அறியக்  கூடியதாக உள்ளது. 

ஆயினும், தற்போது 2014 முடியுந்தருவாயில்;, 2008க்கான நியமனங்கள் 64 எஞ்சி  யுள்ள நிலையில் 2009க்கான நியமனங்களும் முற்றுமுழுதாக வழங்கப்படாதுள்ளது.

எனவே, 2008இல் எஞ்சியுள்ள நியமனங்களை, எஞ்சியுள்ள சித்தி பெற்ற 176 பேர்  களிடமிருந்தும், 90க்கும் 80க்கும் இடைப்பட்ட புள்ளிகள் பெற்றவர்களக் கொண்டும்  நிரப்பவும், 2009க்கான 212 நியமனங்களுக்காகவும், 2010.01.14இல் அமைச்சரவை  யால் அனுமதிக்கப்பட்ட மேலதிக 191 நியமனங்களுக்காகவும் 2010இற்குப் பின்ன ரான  வெற்றிடங்களுக்குமாகவும் புதிதாக விண்ணப்பங்கோரி நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட இவர்கள்  அனைவரும் தீவிரகவனம் செலுத்த வேண்டும் என்பது சங் கத்தின் கோரிக்கையாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :