அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபையின் புதிய நிதிக் குழு உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபையின் விசேட சபை அமர்வு இன்று வியாழக்கிழமை மாலை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற போதே இத்தெரிவு இடம்பெற்றது.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் குழுவுக்காக சபைக்கு சமூகமளித்திருந்த 16 உறுப்பினர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ்இ ஏ.எம்.பரக்கத்துல்லாஹ்இ எம்.எல்.சாலிதீன்இ ஏ.எல்.எம்.முஸ்தபா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் ஆகிய ஐவரும் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
பதவி வழியில் முதல்வர் நிஸாம் காரியப்பர் இதன் ஓர் உறுப்பினராகவும் அக்குழுவின் தலைவராகவும் பணியாற்றுவார்.
அதேவேளை இந்த வாக்கெடுப்பில் தமிழ் உறுப்பினர் எவரும் இக்குழுவுக்கு தெரிவாகவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நான்கு உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதல்வர் உட்பட 11 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினரும் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த வாக்கெடுப்பின் இறுதியில் முதல்வர் நிஸாம் காரியப்பர் கருத்து தெரிவிக்கையில்;
'புதிய நிதிக் குழு உறுப்பினர்களை ஏகமனதாக தெரிவு செய்வதில் உறுப்பினர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தினாலேயே வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொண்டேன்.
இதன்போது தமிழ் உறுப்பினர் எவரும் தெரிவாகாமல் நிதிக் குழுவில் அப்பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருப்பதால்இ அது குறித்து எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றின் தலைமைத்துவங்கள் பேச்சுவார்த்தை நடாத்தி சுமூகமான தீர்வை எட்ட முடியும் என நம்புகின்றேன்' என்று குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment