யூ.கே நபீர் கட்சியில் இணைகிறார் முன்னாள் கிண்ணியா நகர பிதா ஏ.எம் முஜீப்!

 துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

கிழக்கு மாகாணத்தை மையப் படுத்தி பொறியியலாளரும்,பிரபல தொழிலதிபரும்,சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் யூ.கே நபீர் தலைமையில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய முஸ்லிம் கட்சியானது எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எழப் போகும் சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுக்கும் நோக்குடன் பல்வேறு 

அரசியல் முக்கியஸ்தர்கள்,புத்தி ஜீவிகளை தங்களோடு இணைக்கும் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.

அந்த வகையில் பிரபல சட்டத்தரணியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும்,முன்னாள் கிண்ணியா நகர பிதாவுமான ஏ.எம் முஜீப் அவர்களை ஐக்கிய முஸ்லிம் கட்சி இல் இணைத்துக் கொள்வதற்கு நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டை எட்டியதைத் தொடர்ந்து ஏ.எம் முஜீப் அவர்கள் ஐக்கிய முஸ்லிம் கட்சி இல் இணைந்துள்ளதாக அக் கட்சியின் ஊடக இணைப்பாளர் உத்தியோக பூர்வமாக எம்மிடம் தெரிவித்தார்.
மேலும்,அக் கட்சியின் ஊடக இணைப்பாளர் எம்மிடம் கருத்துத் தெரிவிக்கும் போது பல நபர்கள் தங்களோடு இணைய உறுதிமொழி அளித்துள்ளதாகவும் தக்க தருணத்தில் அவர்கள் தங்களோடு இணைய உள்ளதாகவும்,பலரை இணைப்பதற்கான நடவடிக்கைகளில் தங்கள் கட்சி அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :