மேல் மாகாண சபையில் ஹிருனிகா கட்சி தாவவுள்ளதாகவும் மேல் மாகாண சபை ஆட்டம் காணவுள்ளதாகப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. இந்தச் செய்தி உண்மையாயின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்கின்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் என்று மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான பாரதலக்ஷமனனின் மகள் ஹிருனிகா கட்சிதாகவுள்ளதாக செய்திகள் பரப்புரை செய்யப்படுகின்றன. அத்துடன் மேலும் சில உறுப்பினர்கள் அவருடன் கட்சி தாகவுள்ளதாகவும் பலமான செய்திகள் அடிபடுகின்றன.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 1,2,3, ஆம் திகதிகளில் பட்ஜட் வரவு செலவு திட்டத்திற்கான விவாதத்துடன் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சிகாரர்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளன என்கின்ற செய்திகளும் பரப்புரை செய்யப்படுகின்றன.

இது எந்தளவு உண்மை பொய் என்று சொல்ல முடியாது.
எவ்வாறாயின் கட்சி தாவும் நடவடிக்கை நடைபெறுமாயின் மேல் மாகாண சபையில் ஆதரளித்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியின் ஸ்தீரத்தன்மையை நிர்ணயிக்கக் கூடிய கட்சியாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
104 மொத்த உறுப்பினர்களைக் கொண்ட மேல் மாகாண சபையில் 56 ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 3 ஹெல உருமய கட்சி உறுப்பினர்கள் பிரிந்து சென்றுள்ளதால் தற்போது 53 உறுப்பினர்களே ஆளும் தரப்பில் உள்ளனர். இதில் தம் தந்தையின் மரணத்திற்கு நியாயமான தீர்வு கிட்டவில்லை என்பதனாலும் தம்முடைய அரசியல் வழிகாட்டியாகக் கொள்கின்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவுக்காகவும் ஹிருனிகா கட்சி தாவவுள்ளார் என்ற செய்திகள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. அவருடன் மேலும் சில உறுப்பினர்கள் செல்லவுள்ளதாகவும் செய்திகள் உள்ளன.
மாகாண சபையில் தற்போது எதிர் தரப்பில் 28 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், 9 ஜனநாயக் கட்சி உறுப்பினர்களும், 6 மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் 2 ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்களும் உள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவாகவுள்ள 2 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒரு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும் உள்ளனர்.
ஆட்சி ஆட்டம் காணும் நிகழ்வு இடம்பெறுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு இரு தரப்பினருக்கும் அவசியமானதாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

.jpg)
0 comments :
Post a Comment