அஷ்ரப் ஏ சமத்-
சட்டத்தரணியாக கற்கவில்லை ஆனால் அவர் அனுபவத்தினால் சட்டத்துறை வாழ்வில் பொன்விழாக் கானும் சமுகசேவையாளர் க.மு.தர்மராஜா அவர்களை கௌரவிப்பும், அவர்பற்றிய மலர் வெளியீடும் கொழும்பு தமிழ்ச் சங்கத்pல் நேற்று04ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வினை ஊடகவியாலர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
சட்டத்தரணி இராஜகுலேந்திரா தலைமை வகித்தார். பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணியும் கணக்காளருமான ஈஸ்வரன் கலந்து கொண்டார். நூலின் முதற் பிரதியை வடமாகண முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தினக்குரல் பத்திரிகையின் ஆலோசகர் வீ.தனபாலசிங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன், கஜேந்திரன் பொன்னம்பலம், வி.தனபாலசிங்கம், முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இரகுபதி பாலசிறிதரன், ஆகியோர் க.மு.தர்மராஜா பற்றி உரைநிகழ்த்தினார்.
நூல்கள் 400 இலவசமாக வருகை தந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாலைகள், பொன்னாடைகள் போர்த்த வேண்டாம் என அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது. கவிதையிலான வாழ்த்துப்பத்திரம் மட்டுமே படிக்கப்பட்டு திரு தர்மராஜாவிடம் கையளிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment