ஜனவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல், அத னைத் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வட்டார முறையிலான பிர தேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பவற்றை இலக்கு வைத்த அபிவிருத்திப் பணிகள் மற்றும் பிரச்சாரப் பணிகள் என்பன பொத்துவிலில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் கரையோர மாவட்ட அமைப்பாளாக மீராசாகிபு அப்துல் மஜித் நியமிக்கப்பட்டதையடுத்து, கட்சியின் பிரச்சாரப் பொறுப்பாளர் உள்ளிட்ட பாராளு மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பலர் பொத்துவிலில் முகாமிட்டு கல்முனை கரையோர மாவட்டத்திற்கான பிரச்சாரத்தினை ஆரம்பித்திருந்தனர்.
தொடர்ந்து, தினம் ஒரு அபிவிருத்திப் பணி, அடிக்கல் நடுதல், அங்குரார்ப்பண நிகழ்வு, வாழ்வாதார உதவிகள் கையளிப்பு என தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைமை முதல், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் பொத்துவிலுக்கு படை யெடுத்த வண்ணமுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பதவிகளை இழந்து, அல்லது இழக்க வைக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள பொத்துவில் மக்களின் வாக்குகளை சூறையாட, பொத்துவிலுக்கு வருகைதரும் அரசியல் பிர முகர்கள், உள்ளூர் அரசியல்வாதிகளால் வரவேற்கப்பட்டு வருகின்றனர்.
இந்தவகைளில், நேற்று செவ்வாய்க்கிழைமை(04) பொத்துவில் பிரதேச சபை பொது நூலக மண்டபத்தில், தவிசாளர் தலைமையில் நடைபெற்ற தையல் இயந்திரங்கள், கிருமி நாசினி தெளிகருவிகள் வழங்கும் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசல் காஸிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வாழ்வாதார உதவி களை வழங்கி வைத்தார்.
அபிவிருத்திக்கான நிதிகளை ஜனாதிபதி பொருளாதார அமைச்சருக்கு வழங்கி யுள்ளார். அவர், அவற்றை பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு வழங்கி யுள்ளார். அதனை நாங்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் ஊடாக உங்களுக்கு பகிர்ந்தளிக்க நடவக்கை எடுத்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காஸிம் தெரிவித்தார்.
திருத்தியமைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் பிரகாரம், எதிர்காலத்தில் பிரதேச சபைத்தேர்தல்கள் வட்டார ரீதயாக நடைபெற உள்ளது. அதனை எதிர்கொள்ளும் வகையில் எமது பணிகளை முன்னெடுக்க வேண்டீயள்ளது என அங்கு உரையாற்றி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பொத்துவில் பிரதேசத்திலுள்ள 27 கிராமசேவகர் பிரிவுகளும், 09 உறுப்பினர்களுக் கும் தலா 03ஆகப், பிரிக்கப்பட்டு, உறுப்பினருக்கு மூன்று இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டு. ஒவ்வொருவரும் தலா 15 பேர்களைத் தெரிவு செய்து, 20 ஆயிரம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்களும், கிருமி நாசினி விசிறும் தெளி கருவிகளும் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
0 comments :
Post a Comment