பழுலுல்லாஹ் பர்ஹான்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்ட பிரதேச திவிநெகும பொறுப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 27-11-2014 இன்று வியாழக்கிழமை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி பிராந்திய காரியாலத்தில் இடம்பெற்றது.
வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் வலயம் 5ந்திற்கான வலயப் பணிப்பாளர் எஸ்.கே.லியனகே தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்ட பிரதேச திவிநெகும பொறுப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இதில் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி இணைப்பாளருக்கான நியமனக்கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பீ.குணரட்னம்,பிரதிப் பணிப்பாளர் எஸ்.மனோஹிதராஜ்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு,காத்தான்குடி,ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி,வாகரை,பட்டிப்பளை,வெல்லாவெளி, ஏறாவூர்,செங்கலடி, ஒட்டமாவடி,வாழைச்சேனை,கிரான்,வவுணதீவு, கோறளைப்பற்று மத்தி ஆகிய 14 பிரதேச செயலாளர் பிரிவுக்கான ஆண்,பெண் பிரதேச திவிநெகும பொறுப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment