கிழக்கின் சந்தனம் மேற்கில் மறைந்தது!

 ஓட்டமாவடி,அஹமட் இர்ஸாட்-

ட்டக்களப்பு வாழைச்சேனை, முகம்மது இப்றாஹீம் ஆசியா உம்மாவின் 8வது பிள்ளையாக 1963ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி ஜுனைதீன் பிறந்தார். வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்று உயர்கல்வியை கல்முனை ஸாஹிரா கல்லூரி மற்றும் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையிலும் தொடர்ந்தார். இவர் சிறு பராயமுதல் கல்வி, விளையாட்டில் அதி திறமையை வெளிக்காட்டியதன் பயனாக மாவட்ட,மாகாண மட்டங்களில் நடைபெற்ற பல போட்டி நிகழ்வுகளில் தனது திறமைகளைக் காட்டி பல பரிசில்களையும் சாதனைகளையும் ஈட்டியுள்ளார்.

பாடசாலை காலத்தில் பல நிறுவனங்கள், அமைப்புகளில் அங்கத்துவம் பெற்று பயிற்சி நெறிகளின் மூலம் பல அனுபவங்களைப் பெற்றார். பாடசாலை கல்வியைத் தொடர்ந்து வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசத்தில் பல்வேறு வகையான விளையாட்டு, அதி திறைமையுடைய இளைஞர்கள் காணப்பட்ட போதிலும் விளையாட்டு கழகம் இல்லாத குறையை உணர்ந்து சக நண்பர்களுடன் இணைந்து அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தை 1983.06.30ம் திகதி உருவாக்கினார்.

இச்சந்தர்ப்பத்தில் அங்கத்தினர்களுக்கு எமது விளையாட்டு கழகம் தேசிய ரீதியில் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும், எமது இளைஞர் பேசப்பட வேண்டும் என தனது ஸ்தாபக உரையில் குறிப்பிட்டார். இதற்காக தனது சொந்த நிதி மூலம் கழகத்தின் சகல பணிகளையும் முன்னெடுத்தார். இதன் பயனாக அல்-அக்ஸா விளையாட்டுக் கழகம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களில் நடந்த பல சுற்றுத் தொடர்களில் வெற்றிகளையீட்டி சாதனை படைத்தது.

தகப்பனார் போன்று இவரும் சமகாலத்தில் பிரதேச கல்வி, கலை, கலாச்சார மேம்பாட்டில் அக்கறை கொண்டு அல்ஹாஜ் எல்.டி.எம். இஸ்ஹாக் மௌலவியுடன் இணைந்து கல்குடா கல்வி, கலை, கலாச்சார பேரவையை நிறுவி ஸ்தாபகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று மாணவர் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கிவிப்பதற்காக நூல்நிலையம், சனசமூக நிலையங்கள் தோற்றுவித்து பல செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

தமிழ் முஸ்லிம் இளைஞர்களிடம் மிக அன்னிய ஒன்னியமாக பழகக்கூடியவராக காணப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக 1984ம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டார். முஸ்லிம்கள் மத்தியில் தேசிய ரீதியில் பிரபல்யம் அடைந்த லுஆஆயு அதன் கல்குடா கிளையின் செயலாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு எம்.எஸ்.ஏ. நவாஸ் டுடுடீ அவருடன் இணைந்து பல்வேறுபட்ட சமூக சேவையில் ஈடுபட்டு வரிய குடும்பங்களில் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு உத்தியோகத்தர் அல்லது பொதுச்சுகாதார அலுவளராக வரவேண்டும் என்பதே இவரின் ஆசையும் எதிர்பார்ப்பாக இருந்தது. 

இதற்காக பல்வேறுபட்ட நேர்முகப் பரீட்சையில் தோற்றியும் அரசியல்வாதிகளிடம் சென்றும் பயன் கிடைக்கவில்லை. அக்கால பகுதியில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அல்ஹாஜ் றிஸ்வி சின்னலெப்பை அவர்களினால் முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸ்த்துறையில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அப்போதைய அரசாங்கத்தில் வேண்டிக்கொண்டதன் பயனாக திறமை கொண்ட முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவைகளில் இணைத்துக் கொள்ள பல முன்னெடுப்புக்களை எடுத்த வேளையில் மர்ஹும் ஜுனைதீன் ஐP அவர்களின் ஆசிரியரான யு. அகமது (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் ஆலோசனைப்படி பொலிஸ் சேவையில் 1988.08.21ம் திகதி இணைந்து கொண்டார். இவரின் திறமையின் நிமித்தம் உப பொலிஸ் பரிசோதகராக (ளுஐ) கடமையேற்றார்.

ஏறாவூர்,மட்டக்களப்பு, பானந்துறை மற்றும் வடகிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களை விடுதலைப் புலிகள் 1990 ஆம் ஆண்டு முற்றுகையிட்ட வேளையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த இவர், சமயோசிதமாக உயிர்தப்பி பின்னர் தென்பகுதி பெந்தோட்டை பொலிஸ் நிலையத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தென்மாகாணசபை ஆளுனர் அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் அவர்களுக்கு பாதுகாப்பு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார். 

அதேபோன்று மேல்மாகான சபையின் ஆளுனர் அஷ்ஷேக் அலவிமௌலானா அவர்களின் பாதுகாப்புப் பொறுப்பாளராகவும் கடமைபுரிந்தார். பின்னர் கொஸ்கொட,அம்பலாங்கொட,வலபிட்டி பொலிஸ் காவல் நிலையங்களில் பணிபுரிந்த வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லிம்களின் வரலாற்றுக் காலம் தொட்டு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதி முதன் முதலில் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான எம்.பி. முகைதீன் அப்துல்காதர் அவர்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பு வழங்கப்பட்ட வேளையில் தனது மண்ணின் மைந்தனை பாதுகாக்கும் பொறுப்பினை அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் ஊடாக (எம்.எஸ்.டி.) இணைந்து கொண்டார். பிரதியமைச்சரின் மரணம் வரை பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்து வந்தார்.

இக்காலப் பகுதியில் 1983 – 1988ம் ஆண்டு வரை அல்அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைமை ஏற்ற இவர் பின்னர் தொழில் நிமித்தம் தலைமைப் பொறுப்பை சக அங்கத்தவர்களுக்கு வழங்கி ஸ்தாபகராகவும் போசகராகவும் இருந்து வழிகாட்டி வந்தார். 

தனது திருமண பந்தத்தை களுத்துறை மாவட்ட வெளிப்பன்னையில் முகம்மது தம்பி பாத்திமா றுமையா ஆசிரியையுடன் திருமணம் செய்து நான்கு பிள்ளைகளின் தகப்பனாகவும் வெளிப்பன்னை மக்களுக்கும் சேவை செய்யும் நோக்கில் வெளிப்பன்னை வை.எம்.எம்.ஏயின் பிரதித் தலைவராகவும் இருந்து பல சமூக சேவை பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.

இவர் பிறந்த மண்ணுக்குப் பெறுமை சேர்க்கும் வகையில் இவரின் ஒவ்வொரு பணியும் அமைந்துள்ளது. அது மாத்திரமல்லாமல் தனது அரசியல் செயற்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து அதன் ஸ்தாபகரும் தலைவருமான அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் கைகோர்த்து அவரின் இறுதிமூச்சுவரை தொடர்ந்தார். சிறுவயது முதல் மார்க்கத்தையும் உலமாக்களையும் கண்ணியமாக மதிக்கக்கூடியவராகவும் தாய்தந்தைஇ சொந்தபந்தங்களுடனும் நண்பர்கள் வட்டத்துடனும் சினேகமாகவும் பழகக்கூடியவராகவும் காணப்பட்டார். 

எப்போதும் ஊரின் முன்னேற்றம் குறித்துப் பேசக்கூடியவராகவும் பிறந்த மண்ணின் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகின்ற கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையைப் பெற்றுக் கொள்ள தன்னால் இயன்ற முன்னெடுப்புக்களை எடுத்துள்ளார்.

மேலும் இவர் தனது அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் (எம்.எஸ்.டி) ஊடாக அப்போது பாராளுமன்ற ஆலுவல்கள் அமைச்சராக இருந்த அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியாகவும் பின்னர் கொழும்புமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அல்ஹாஜ் எம். மஹ்ரூப் அவர்களுக்கும் சிறிது காலமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் பாதுகாப்புப் பொறுப்பாளராகவும் கடமையாற்றிய வேளையில் நிரந்தரமாகவும் இறுதி நேரம்வரை ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவர்களுக்காக ஆறு வருடங்கள் பிரதம பாதுகாப்புப் பொறுப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

இறுதி நேரத்தில் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருக்குரிய எல்லா தகமைகளையும் பெற்றிருந்து பதவி பொறுப்பேற்கும் வேளையில் அன்னார் குடும்பத்தினரையும் நண்பர்களையும் சொல்லன்னாத் துயரத்திலாழ்த்தி 2012.11.08 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து மாரடைபு நோயினால் எம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். அன்னாரது இழப்பு அன்னாரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது இவ்வூருக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாரது பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!!!

'இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜுஊன்'
தகவல்: அகில இலங்கை வை.எம்.எம்.ஏ கல்குடா பேரவை









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :