இக்பால் அலி-
ரணில் விக்கிரமசிங்க எங்காயவது ஒருவரை இழுத்துக் கொண்டு வந்து தேர்தலில் நிறுவத்துவது தான் பழக்கம், ஏனென்றால் தோல்வியுற்றாலும் அவர் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக இருப்தற்காகும். என்று வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவத்தார்.
இவ்வாறு குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியில் ஹொரம்பாவப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது கலந்து கொண்ட வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
இன்று எமது ஜனாதிபதி அவர்கள் பல சக்திமிக்க சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. நான் சொல்ல விரும்புகின்றேன். எதிர்கட்சியில் 13 வருடங்கள் இருந்தேன். எதிர்ட்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இயன்றவரை தலையீடுகளைச் செய்துள்ளேன். ரனில் விக்கிரமசிங்கவுடன் பாதையெங்கும் திரிந்தேன். அடிவாங்கினோம். கண்ணீர் புகை அடிக்கப்பட்டது. என்னுடைய வாகனம் கூட உடைக்கப்பட்டது.
இது சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து ஜனநாயகத்தை கட்டி எழுப்பச் சென்ற போது ஏற்பட்ட சம்பவம். இதற்கான காரணம் என்னவெனில் மனிதனுக்குரிய மனிதத் தன்மை கொண்ட தலைமைத்துவம் தலைவரிடம் இருத்தல் வேண்டும். எனக்கொரு கதை ஞாபகம் வருகிறது. பாராளுமன்றம் செல்லும் போது அங்கு வரவேற்கும் அதிகாரி இருக்கின்றார்.
நான் எப்பொழுதும் வரும் போதும் செர் குட் மோனிங் என்று கூறுவார். நான் அவருடன் உடம்பதை; தொட்டு எப்படி சுகமா என்றுவிட்டுச் செல்வேன். அந்த அதிகாரி என்னிடம் கூறினார். அந்த அதிகாரி 23 வருடங்கள் பாராளுமன்றத்தில் சேவையாற்றியுள்ளார். ரனில் விக்கிரமசிங்க வரும் போது நான் எப்போதும் குட்மொனிங் கூறுவேன். அவர் ம்.ம்.. என்று சைகை செய்து விட்டுச் செல்வார். இது உண்மைக் கதை. காலையில் செல்லும் போது குட் மோனிங் சொல்வேன். அவர் ஒரு சதத்திற்கு கணக்கு எடுப்பதில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவுடன் குட் மோனிங் சொன்னால் ஆ ஹா எப்படி என்று கூறி முதுகில் தட்டிவிட்டுச் செல்வார்.
இதுதான் நிலைமை. எமது ஜனாதிபதியை கண்டவுடன் மக்கள் கத்திக் கொண்டு கூக்குரலிடுகின்றனர். ஜனாதிபதியின் கரத்தை பற்றிப் பிடிக்கின்றனர். இது அவர் மீது கொண்டுள்ள அன்பினால் ஆகும். சிரித்த முகத்துடன் மக்களுடன் கலந்துரையாடப்படுகிறது. அதுதான் மக்கள் எதிர்பார்க்கின்ற பெறுமதியான தலைமைத்துவம்.
ரனில் விக்கிரமசிங்கவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நீண்ட தூரம் முயற்சி செய்தோம். ஆனால் அவரால் இயலாத காரியம்.
எமது ஜனாதிபதி அவர்கள் செய்த சேவையை யாரும் மறக்க முடியாது. யுத்தம் உச்ச நிலையை அடைந்திருந்தது. இதனை ஒரு போதும் நிறுத்த முடியாது என இருந்தது. இந்தப் பகுதிகளிலுள்ள தாய் தந்தையர்கள் தங்களுடைய பிள்ளைகள் எப்போது சவப் பெட்டிகளில் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். 30 வருடங்களாக சீல் வைக்கப்பட்ட சவப் பெட்டிகள் வந்தன. ஜனாதிபதி அவர்கள் இதனை இல்லாமற் செய்தார்கள். உறுதியான முடிவை எடுத்து இனை அடித்துத் தான் இல்லாமற் செய்ய வேண்டும் என்று செய்து முடித்தார்கள். 2005 -2009 ஆம் ஆண்டு காலங்களில் இதனை நிறைவு செய்தார்கள். இந்த சிறிய கால இடைவெளியில் சிறந்த சேவைகளைச் செய்துள்ளார்கள்.
வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது முதலாவது பாதை அவசியமாகும். நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது காலடி எடுத்து வைப்பது காபட் வீதிகளில் ஆகும். நீங்கள் செல்லும் போது நேர முழுவதும் ஏசி ஏசித் தான் வீதிக்குச் செல்வதாகும். இப்போது காபட் பாதை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் சந்தைக்கும் போகும் போது சந்தைககள் இருக்க வில்லை. இப்போது சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது குடி நீர் வசதிகைய மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பெய்யும் மழை காரணமாக இதனை ஆரம்பிக்க முடியவில்லை.
ரனில் விக்கிரமசிங்க எங்iகாயவது ஒருவரை எழுத்துக் கொண்டு வந்து தேர்தலில் நிறுவத்துவது தான் பழக்கம், ஏனென்றால் தோல்வியுற்றாலும் அவர் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக இருப்பார். அடிவாங்குவது யார் கிராமத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள். ரனில் விக்கிரமசிங்க அங்கிருந்து கொண்டு பேசுவார்.
தோல்வியுற்றால் எல்லாவற்றையும் மறந்து விடுவார். எவர் வந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைப்போவதில்லை என்று வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவத்தார்.

0 comments :
Post a Comment