அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பில் வாழும் முஸ்லீம் மாணவர்களுக்காக மேலும் ஒரு தனியார் பாடசாலையொன்றை நிறுவுவதற்கு சவுதிஅரேபியாவின் இலங்கைத் தூதுவர் ஹூசைன் முஹம்மத் அவர்களின் முயற்சியினால் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி சவுதி றியால் 750.000 வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பில் வாழும் முஸ்லீம்களின் கல்வியை முன்னேற்றத்துவதற்கு இத் திட்டம் இன்னொரு மைக்கல்லாகும். கடந்த 30 வருடகாலமாக இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய நிலையத்தின் ஊடாக பல்கலைக்கழகங்களில் பயிலும் வைத்திய,முகாமைத்துவ பொறியியல் மற்றம் உயர் டிப்ளோமா பட்டங்களைப் பயிலும் முஸ்லீம் மாணவர்களுக்க இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் புலமைப்பரிசில் வழங்குவதையும் இதனால் முஸ்லீம் கல்வியின் பாரிய முன்னேற்றம் கண்டு வருவதாக இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் தூதுவர் ஹூசைன் முகம்மத் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லீம்களின் கல்வியில் குறிப்பாகா கொழும்பில் வாழும் முஸ்லீம் சிறார்களின் கல்விக்கு தற்பொழுது கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆளுணர் பௌசுல் ஹமீட் தலைமையில் மிகவும் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இக் கல்லூரி கடந்த 100 வருடங்கள் பழமை வாய்ந்தாகவும் ;கொழும்பு சாகிராக் கல்லூரியின் மற்றுமொறு கிளையாகவே மகரகமவில் மேலும் ஒரு தணியார் கல்லூரி நிறுவுவதற்கே மேற்படி நிதியை இஸ்லாமிய அபிவிருத்தி வழங்கியுள்ளது.
பௌசுல் ஹமீட் தகவல் தருகையில் -
மகரகமவில் கொழும்பு சாஹிராக் கல்லூரிpக்குச் சொந்தமான 8 ஏக்கர் காணி உள்ளதாகவும் அதில் இந்த பாடசாலை நிறுவப்படும். கொழும்பு நகரில் 19 முஸ்லீம் பாடசாலைகள் உள்ளன அதில் 35ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அதில் 4 பாடசாலைகளைத் தவிர ஏனைய 15 பாடசாலைகளும் பௌதீகம் மற்றும் கல்வி வசதிகளில் பின்தங்கியதாகவே காணப்படுகின்றன.
இப் பாடசாலையை நிறுவுவதற்கு 800 மில்லியன் ருபா தேவைப்படுகின்றன. என ஹமீட் தெரிவித்தார். இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி வழங்கும் இந்; நிதியின் ஊடக இப் பாடசாலையை நிறுவதன் முலம் மேலும் கொழும்பு சாஹிரா போன்றதொரு பாடசாலை உருவாகும். என பௌசுல் ஹமீத் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment