பழுலுல்லாஹ் பர்ஹான்-
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 24 இலட்சத்து 40 நாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வாழ்வாதார அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 78 திவி நெகும பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்,காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்திற்கு தேவையான 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான உள்ளக ஒளி பெருக்கி சாதனம் கையளிக்கும் நிகழ்வும் 07-11-2014 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உள்ளிட்ட அதிதிகளினால் 78 திவி நெகும பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தின் மண்டபத்திற்கு தேவையான உள்ளக ஒளி பெருக்கி சாதனம் வித்தியாலயத்தின் அதிபர் ஜனாபா நயீமா அப்துல் ஸலாமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் ஜெஸீம்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர்,சியாட்,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),காத்தான்குடி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. கருநாகரன்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர்,காத்தான்குடி பிரதேச வாழ்வின் எழுச்சி (திவிநெகும) முகாமையாளர் ஈ.குணரட்னம், உட்பட திவி நெகும உத்தியோகத்தர்கள்,காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்று வழங்கி வைக்கப்பட்ட 24 இலட்சத்து 40 நாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு திவி நெகும பயனாளிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு தையல் இயந்திரம் 78 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் , காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தின் மண்டபத்திற்கு 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒளி பெருக்கி சாதனமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment