பி.எம்.எம்.ஏ.காதர்-
ஆசியா மன்றத்தின் கொய்க்கா திட்டத்தின் கீழ் மருதமுனை பொது நூலகத்தில் பிரஜகைள் வள நிலையம் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு இன்று (23-10-2014) மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமானி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் இந்த நிகழ்வை நெறிப்படுத்தினார். பிரஜகைள் வள நிலையத்திற்கான புரஜெக்டர் உபகரணங்களையும் மற்றும் நூல்களையும் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, மருதமுனை பொது நூலகத்தின் நூலகர் திருமதி நஸ்லியா காசீம் உமர்கத்தா ஆகியோரிடம் அமைச்சர் ஹக்கீம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர,; கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் மஜீட்,மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர் அலி உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment