சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் முன்னாள் அதிபர் இப்றாகீமின் 40வருட கல்விச் சேவைக்கு பாராட்டு





ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

ம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் எம்.எம்.எம்.இப்றாகீம் (றிபிள் எம் இப்றாகீம்) அவர்களின் 40வருட கல்விச் சேவையைப்; பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

பிரபல சமூக சேவையாளர் ஏ.எல்.ஏ.றசூல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, மகளீர் விவகாரம், கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற்பயிற்சிக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.எம்.எம்.சஃபீர், இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜாபீர், சபூர் வித்தியாலய அதிபர் திருமதி.ஜெமீலா புஹாரி, ஓய்வு நிலை அதிபர் எஸ்.ஏ.றாசீக், மௌலவி ஆசிரியர் எம்.எம்.ஹாரீஸ் உட்பட பெருந்தொகையான பெற்றோர், மாணவர், நலன் விரும்பிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

20 வருடங்கள் ஆசிரியராகவும், 20 வருடங்கள் அதிபராகவும் மொத்தத்தில் 40 வருடங்கள் கல்விப் பணியாற்றி, ஓய்வு பெற்றுச் சென்ற எம்.எம்.எம்.இப்றாகீம் அவர்கள் பிரதம அதிதி, கௌரவ அதிதிகள், பெற்றோர்களினால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம், பரிசுப் பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு பேசுகையில்:- 'முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத் அவர்கள் இப்பாடசாலை உருவாக்கியுள்ளார். அந்தப் பெருமகனை இச்சமூகம் என்றும் மறந்து விடமூடியாது. அவரையும், அவரோடு சேர்ந்து இப்பாடசாலையை உருவாக்க, அல்லது.கட்டி வளர்க்க உதவிய அத்தனை பேரினதும் சேவைகளை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும். அவர்களது பாவங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும். அவர்களுக்கு 'பிர்தௌஸ்'; எனும் உயர்ந்த சொர்க்கத்தை அல்லாஹ் வழங்க வேண்டுமென்று நாமெல்லோரும் பிரார்த்திக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :