த.நவோஜ்-
பாடசாலை செல்லும் வறிய மாணவர்களுக்கு உதவும் திட்டத்தில் லண்டனில் உள்ள Make a Different Sri Lanka (MDSL) அமைப்பினால் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் Make a Different Sri Lanka (MDSL) அமைப்பினால் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை செல்லும் வறிய முப்பது மாணவர்களுக்கு பாதணிகள், பாடசாலை பைகள் என்பன வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது முப்பது மாணவர்களுக்கு பாதணிகள், பாடசாலை பைகள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment