ஏ.எல்.றமீஸ்-
“எதிர்கால வெற்றிக்காக அறிவோடு பண்பையும் வளர்ப்போம்”; எனும் தொனிப்பொருளில் 2014இல்; புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கவிருக்கும் மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலயத்தில் இன்று (09)நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட பிரஜைகள் சமூகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தவும், பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் நோக்கத்திற்காகவும்; நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கினை அனுபவம் வாய்ந்த ஆசிரியரான எஸ்.ஜெயகாந்தன் வழிநடாத்தினார்.
காலை 8.30 தொடக்கம் 12.30 வரை நடைபெற்ற கருத்தரங்கில் 14 பாடசாலைகளை சேர்ந்த சுமார் 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீட சிரேஸ்ட மாணவ ஆலோசகரும், அம்பாரை மாவட்ட பிரஜைகள் சமூகத்தின் ஆலோசகருமான விரிவுரையாளர் டாக்டர் எஸ்.குணபாலன் அம்பாரை மாவட்ட பிரஜைகள் சமூகத்தின் தலைவர் எம்.ஜெ.அன்வர் நௌசாத் அம்பாரை மாவட்ட பிரஜைகள் சமூகத்தின் பதிவாளர் எஸ்.வரதராஜ் உள்ளிட்டோர் பிரசன்னமாயிருந்தனர்.
அம்பாரை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பிரஜைகள் குழுவானது மூவின மக்களையும் இணைக்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவது குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட டாக்டர் எஸ்.குணபாலன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி பரீட்சையில் சித்தியடைவதுடன் சவால் மிக்க எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க கூடியவர்களாக மாணவர்கள் உருவாகவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
_Copy1.jpg)
_Copy2.jpg)
_Copy2.jpg)
0 comments :
Post a Comment