இன்று வபாத்தான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹஸன் அஸ்கரி மணித நேயம் மிக்கவர் அன்னாரின் மறைவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மாத்திரமல்ல திருக்கோணமலை மாவட்ட மக்களுக்கேபாரிய பேரிளப்பாகும் இன்று பொத்துவில் பிரதேச சபை ஏற்பாடு செய்த விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில். நான் மாணவனாக இருக்கின்றபோதில் இருந்து கண்ணியத்துக்குரிய உலமா ஹஸன் அஸ்கிரியின் நல்ல பேச்சுக்களை கேட்டு அவரின்பால் ஈர்கப்பட்டவர்களிலல் நானும் ஒருவன் அல்லாஹ் அவருக்கு வழங்கிய அருட்கொடையை சரியாக செய்யக்கூடிய ஒரு நல்ல மனிதர் இன்று இன்று உலகை விட்டுப்பிரிந்து விட்டார் அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் பிரார்திப்போம் என்று கூறனார்.
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கம் கிடைக்க வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஆமீன்

0 comments :
Post a Comment