எம்.ஜே.எம். முஜாஹித்
அதிகரிக்கப்பட்டுள்ள உள்நாட்டு தபால் கட்டணங்கள் இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண தபாலுக்கான முத்திரைக்கட்டணம் 5ரூபாவிலிருந்து 10ரூபாவாகவும் தபால் அட்டையில் விலை 8ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 20கிராம் வியாபாரக்கடிதங்களின் கட்டணம் 15ரூபாவாகவும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கிராமுக்கும் 10 ரூபா வீதம் முதல் அறவிடப்படும்.
பொதிகளுக்கான தபால் கட்டணம் 250 கிராமுக்கு 90 ரூபாவும் 500 கிராமுக்கு 150 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்தபாலுக்கான தற்போதைய கட்டணங்களில் மாற்றங்கள் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 31ம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் டீ.எல்.பி. ரோஹன அபேயரத்ன தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் ஏற்றம், நானவிதான மற்றும் காகிதாதிகள் செலவுகள் அதிகரிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டே தபால் கட்டணங்களுக்கான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment